இந்தியன் டீம்.. இவங்களை பார்த்து கத்துக்குங்க.. தோற்றாலும் பாராட்டை பெற்ற வங்கதேசம்!
பிர்மிங்காம் : இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தாலும், வங்கதேசம் பலரது பாராட்டையும் பெற்றது.
இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. வங்கதேசம் தோல்வி அடைந்தாலும்,கடைசி வரை வெற்றிக்காக போராடியது.
இந்திய அணிக்கு எப்படி கடைசி வரை போராட வேண்டும் என பாடம் எடுத்ததை போல அமைந்தது வங்கதேச அணியின் ஆட்டம்.

இங்கிலாந்து போட்டி
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த போது, கடைசி நன்கு ஓவர்களில் 62 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், வெற்றிக்கான போராட்டத்தை கைவிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆடியது.

வங்கதேசம் எப்படி ஆடியது?
அதே சமயம், அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சேஸிங் செய்த வங்கதேசம் முக்கிய விக்கெட்களை 34 ஓவர்களுக்குள் இழந்தாலும், கடைசி வரை போராடியது, 48வது ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றது. பும்ராவின் அருமையான பந்துவீச்சால் தான் தோல்வி அடைந்தது.

இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. ராகுல் 77, ரோஹித் 104 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் குவித்தது இந்திய அணி. சவாலான இலக்கை நோக்கி ஆடியது வங்கதேசம்.

சைபுதின் போராட்டம்
அந்த அணி 33.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது ஓவருக்கு 8.5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. வங்கதேச வீரர் சைபுதின் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு போராடினார். 38 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

பும்ரா வீழ்த்தினார்
மற்ற பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். பும்ரா 48வது ஓவரில் கடைசி இரண்டு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து வங்கதேசத்தை வீழ்த்தினார். அப்போது அந்த அணி 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. வங்கதேச அணியின் போராட்டம் சேஸிங்கில் தடுமாறி வரும் இந்திய அணிக்கு பாடம் எடுத்ததை போல அமைந்தது.


Click it and Unblock the Notifications