Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.. வெற்றிக்குப் பின் 87 வயது ரசிகையை சந்தித்த கோலி, ரோஹித் சர்மா!

Recommended Video

Elderly indian fan: Ind Vs Ban: இந்திய வீரர்களை ஆசிர்வதித்த 87 வயது இந்திய ரசிகை- வீடியோ

பிர்மிங்காம் : இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா 87 வயது ரசிகரை சந்தித்து மகிழ்ந்தனர்.

சாருலதா படேல் என்ற அந்த முதிய ரசிகரிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கினர். கோலி அவருடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

இந்திய அணிக்கு தான் உலக அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களே இல்லை என்னும் நிலை உள்ளது. இந்திய விளையாடும் போட்டிகள் மட்டுமின்றி, பிற முன்னணி நாடுகள் விளையாடும் போட்டிகளும், ஐசிசி நடத்தும் பல நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களும் கூட இந்திய ரசிகர்களை குறி வைத்தே திட்டமிடப்படுகிறது.

87 வயது ரசிகை

87 வயது ரசிகை

அப்படிப்பட்ட தீவிர இந்திய ரசிகர்களில் ஒருவர் தான் 87 வயதான சாருலதா பட்டேல். இவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்துக்கு வந்திருந்தார். பல இளம் ரசிகர்கள் போலவே, தேசிய கொடியை கன்னத்தில் வரைந்து கொண்டு, கையில் தேசிய கொடியை ஏந்திக் கொண்டு கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

இருவரும் ஆசிர்வாதம்

இருவரும் ஆசிர்வாதம்

இந்தப் போட்டியில், வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி, நேற்றைய போட்டியில் சதம் விளாசிய துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும், அந்த முதியவரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

கோலி பெருமிதம்

இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் 87 வயது சாருலதா பட்டேல் அவர்கள் மிகச் சிறந்த ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள ரசிகர்களில் ஒருவர். வயது ஒரு எண் மட்டுமே. அவருடைய ஆசிர்வாதத்துடன் அடுத்த போட்டிக்கு செல்கிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த போட்டி

இந்தியா அடுத்து ஜூலை 6 அன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், அந்தப் போட்டியில் இந்திய அணி பரிசோதனைகள் செய்து பார்க்கக் கூடும். .

Story first published: Wednesday, July 3, 2019, 9:36 [IST]
Other articles published on Jul 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+