குஜராத்ல கூட தமிழ் கமண்டரி பார்க்க நீங்க தான் காரணம்.. மஞ்ச்ரேக்கரை பங்கம் செய்த ஆர்ஜே பாலாஜி!

WORLD CUP 2019: IND VS BAN | மஞ்ச்ரேக்கரை பங்கம் செய்த ஆர்ஜே பாலாஜி- வீடியோ

பிர்மிங்காம் : முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நேரலை ஒளிபரப்பில் செமயாக கலாய்த்து இருக்கிறார் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் ஆர்ஜே பாலாஜி.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கிலத்தில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்து வருகிறார். அவரது வர்ணனை மீது கடும் விமர்சனம் உள்ளது.

இந்த நிலையில், அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வர்ணனை செய்து வரும் பாலாஜி கலாய்த்துள்ளார்.

மஞ்ச்ரேக்கர் என்ன செய்தார்?

மஞ்ச்ரேக்கர் என்ன செய்தார்?

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார். சமீப காலமாக அவரது வர்ணனை ஒரு தலைப்பட்சமாக மாறி வருகிறது. மும்பையை சேர்ந்த மஞ்ச்ரேக்கர், மும்பை வீரரான ரோஹித் சர்மா உள்ளிட்டோரை புகழ்ந்து பேசி வருகிறார். தோனி, கோலி உள்ளிட்டோரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

சில இந்திய வீரர்களை மட்டும் ஆதரித்து பேசுவது, அவருக்கு பிடிக்காத வீரர்கள் என்ன செய்தாலும் அதை தவறு என கூறுவது, எதிரணியை பாராட்டாமல், இந்திய அணி குறித்து மட்டுமே பேசி வருவது என அவர் வர்ணனை குறித்து இணையத்திலும், ஐசிசியிடமும் புகார் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

மற்ற வர்ணனை

மற்ற வர்ணனை

ஆங்கில வர்ணனையில் மஞ்ச்ரேக்கர் தவிர்த்து மற்ற யார் மீதும் எந்த புகாரும் இல்லை. எனினும், பலரும் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்யும் போது சேனலை மாற்றி விடுவதாகவும், சிலர் மற்ற மொழி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலாஜி கலாய்

பாலாஜி கலாய்

இந்த நிலையில் தான் ஆர்ஜே பாலாஜி, சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கலாய்த்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அதிக பார்வையாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும், அதனால், கேட்காமலேயே தமிழ் வர்ணனையாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும். அதற்கு மஞ்ச்ரேக்கர் தான் காரணம் என்று கூறினார்.

கோட், வாட்ச் கொடுத்தது யார்?

கோட், வாட்ச் கொடுத்தது யார்?

இன்னைக்கு நாங்க இந்த கோட் வாங்கினோம், இந்த வாட்ச் கட்டி இருக்கோம், இந்த பேன்ட், ஷூ எல்லாம் போட்ருக்கேன் என்றால் அதற்கு காரணம் நீங்க பண்ற கமண்டரி தான் என்று செமயாக கலாய்த்தார். குஜராத்ல கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு நிறைய பார்வையாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும் கூறினார் பாலாஜி.

நடவடிக்கை பாயுமா?

நடவடிக்கை பாயுமா?

இந்த அளவுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை மீது ரசிகர்கள் வெறுப்பில் இருந்தும் அவரை உலகக்கோப்பை தொடரில் வர்ணனையாளராக நியமித்து இருக்கும் ஐசிசி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இனியாவது உஷாராகுமா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
IND vs BAN Cricket World cup 2019 : RJ Balaji trolls Sanjay Manjrekar in live commentary
Story first published: Wednesday, July 3, 2019, 12:29 [IST]
Other articles published on Jul 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more