Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெட்ட வார்த்தை சொல்லி.. ஷமி, சாஹலை திட்டிய கேப்டன் விராட் கோலி.. வைரல் வீடியோ!

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | ஷமி, சாஹலை திட்டிய கேப்டன் விராட் கோலி.. வைரல் வீடியோ!

பிர்மிங்காம் : கேப்டன் விராட் கோலி கோபமாக ஷமி மற்றும் சாஹலை பார்த்து திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

கேப்டன் கோலி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் பரபரப்பு அதிகம் என்பதால் வழக்கத்தை விட கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா 315 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த போதும், வங்கதேசம் அசராமல் சேஸிங் செய்து இறுதியில் போராடித் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் தான் கோலி கோபமடைந்துள்ளார்.

வங்கதேசப் போட்டி

வங்கதேசப் போட்டி

அந்தப் போட்டியின் 27வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்து வந்தார். புவனேஸ்வர் வீசிய பந்தை லிட்டன் தாஸ் மிட்-ஆஃப் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார்.

பும்ரா முயற்சி

பும்ரா முயற்சி

பும்ரா பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால், பந்து ஸ்டம்பில் படவில்லை. இதனால், பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அதே சமயம், பந்து ஷமி இருந்த திசையை நோக்கி சென்றது. ஷமிக்கு பின் சாஹல் நின்று இருந்தார்.

ஷமி நழுவ விட்டார்

ஷமி நழுவ விட்டார்

பந்து ஷமி அருகே வந்த போது ஷமி பந்தை பிடிக்க முயன்று அதை நழுவ விட்டார். அவருக்கு பின்னே இருந்த சாஹல் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் பந்தை எடுக்காமல் சில வினாடிகள் தாமதித்தார்.

கோபம் கொண்ட கோலி

இதற்குள் லிட்டன் தாஸ் இரண்டு ரன்கள் ஓடி முடித்து விட்டார். இதைக் கண்டு எரிச்சலடைந்தார் கோலி. ஷமி, சாஹல் இருந்த திசையை நோக்கி கெட்ட வார்த்தை சொல்லி, "என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா?" என்று திட்டினார்.

யாரை திட்டினார்?

யாரை திட்டினார்?

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய அணி இந்தப் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், இந்த விவகாரம் பெரிதாக மாறவில்லை. சிலர், இந்த வீடியோவில் கோலி, ஷமியை தான் திட்டி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

ஓரங்கட்டப்படும் ஷமி

ஓரங்கட்டப்படும் ஷமி

கேப்டன் விராட் கோலி, ஷமியை ஓரங்கட்டி வருவதாக சில வதந்திகள் உலா வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஷமி உலகக்கோப்பை தொடரில் வங்கதேசப் போட்டி தவிர்த்து மற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2019, 21:06 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+