For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாயை பிளக்க வைத்த சாதனை.. கபில் தேவ், ஹர்பஜன் சிங் வரிசையில் வரலாறு படைத்த இளம் வீரர்!

Recommended Video

Deepak Chahar breaks 7 year old best ever T20I bowling figures

நாக்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சாஹர் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இந்திய அளவில் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் தீபக் சாஹர்.

மேலும், டி20 வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் தீபக் சாஹர்.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

இந்தியா - வங்கதேசம் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் அபாரமாக இருந்தது.

 தீபக் சாஹர் பவுலிங்

தீபக் சாஹர் பவுலிங்

தீபக் சாஹர் பந்துவீச்சில் ஓவருக்கு ஓவர் மிரட்டலாக பந்து வீசினார். தான் வீசிய முதல் ஓவரிழ்க் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். அவரது இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் எடுத்தார்.

ஹாட்ரிக் எடுத்தார்

ஹாட்ரிக் எடுத்தார்

அவரது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்த அவர், கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்கள் எடுத்து அதை ஹாட்ரிக் ஆக மாற்றினார்.

இந்திய அளவில் வரலாறு

இந்திய அளவில் வரலாறு

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் எடுத்து இருந்தாலும், டி20 போட்டிகளில் இதுவரை இந்தியர்கள் ஹாட்ரிக் எடுக்காமல் இருந்தனர். அந்தக் குறையை போக்கி உள்ள தீபக் சாஹர் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அளவில் முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்துள்ளார்.

மற்ற ஹாட்ரிக் சாதனை

மற்ற ஹாட்ரிக் சாதனை

ஒருநாள் போட்டிகளில் சேத்தன் சர்மா, கபில் தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் எடுத்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங், இர்பான் பதான், பும்ரா ஆகியோர் ஹாட்ரிக் எடுத்துள்ளனர். கபில் தேவ், ஹர்பஜன் சிங் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் இணைந்துள்ளார் தீபக் சாஹர்.

12வது இடம்

12வது இடம்

இந்திய அளவில் டி20 போட்டியில் முதல் ஹாட்ரிக் சாதனை செய்த தீபக் சாஹர், உலக அளவில் 12வது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும், 2019ஆம் ஆண்டில் இதுவரை ஆறு ஹாட்ரிக் விக்கெட்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

இந்தப் போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார் தீபக் சாஹர். இது தான் சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சு.

ஏழு வருடம் கழித்து..

ஏழு வருடம் கழித்து..

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்ததே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. ஏழு வருடம் கழித்து அதை முறியடித்து சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

நான்காம் இடம் பெற்றார்

நான்காம் இடம் பெற்றார்

சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவில் நடந்த அனைத்து உள்ளூர் டி20 போட்டிகளிலும் சேர்த்து தீபக் சாஹர் நான்காவது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாயிரம் போட்டிகளில்..

எட்டாயிரம் போட்டிகளில்..

உலக அளவில் இதுவரை எட்டாயிரம் சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளுக்கும் மேல் நடந்துள்ள நிலையில், அதில் நான்காவது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தீபக் சாஹர்.

Story first published: Monday, November 11, 2019, 11:05 [IST]
Other articles published on Nov 11, 2019
English summary
IND vs BAN : Deepak Chahar joins Kapil Dev and Harbhajan Singh in Hatrick wicket record.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+