Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் இந்திய அணி என்ன முடிவு எடுக்க வேண்டும்? முழு விவரம்!

டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெல்லி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம். அதேபோல் டெல்லியின் வானிலை மற்றும் டாஸ் வென்றால் கேப்டன்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்வோம்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 128 ரன்கள் என்ற இலக்கை வெறும் 11.5 ஓவர்களில் விரட்டி இந்திய அணி புதிய சாதனை படைத்தது. ஹர்திக் பாண்டியா ஃபினிஷிங், கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடி, சஞ்சு சாம்சனின் கிளாசிக் ஆட்டம் என்று பேட்ஸ்மேன்கள் மிரட்டினர்.

ind vs ban sanju samson suryakumar yadav

அதேபோல் அர்ஷ்தீப் சிங்கின் பவர் பிளே அட்டாக், வருண் சக்கரவர்த்தியின் கம்பேக் என்று இந்திய அணிக்கு ஏராளமான சாதகங்கள் அமைந்தன. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணியால் எளிதாக டி20 தொடரை கைப்பற்றி அசத்த முடியும்.

இதனால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. டெல்லி மைதானத்தை பொறுத்தவரை இரு பக்கங்களின் பவுண்டரி தூரமும் 65 மீட்டர் மட்டும் தான். இதனால் பேட்ஸ்மேன்களால் எளிதாக பவுண்டரி, சிக்சர்களை விளாச முடியும். 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி மைதானத்தில் நடந்த 5 ஐபிஎல் போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன.

இதன் காரணமாக டெல்லி மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பது உறுதியான ஒன்றாகும். அதேபோல் 2022 ஐபிஎல் தொடர் முதல் டெல்லி மைதானத்தில் நடந்துள்ள 12 போட்டிகளில், 8 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வென்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன், முதல் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க முயற்சிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களில் மழை பெய்து வந்தாலும், டெல்லியின் வானிலை வெப்பமாக உள்ளது. 32 டிகிரி வரை பகலில் வெப்பம் இருக்கும் என்பதால், இந்தப் போட்டிக்கு மழையால் பாதிப்பு இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சொந்த மண்ணில் விளையாடுவதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் டெல்லி மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி ஒருமுறை வென்றிருக்கிறது. இதனால் இந்த டி20 தொடரில் வங்கதேச அணி கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணி, 9 வெற்றி, 10 தோல்வியுடன் இருக்கிறது.

Story first published: Wednesday, October 9, 2024, 7:50 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+