For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னத்த ஆடுறாரு? டாப் கியரை போட்டு தூக்க வேணாமா? சீனியரா இருந்தாலும் பரவாயில்லை.. கழட்டி விடுங்க!!

மும்பை : இந்திய டி20 அணியில் இருந்து மூத்த வீரர் ஷிகர் தவானை நீக்க வேண்டும் என பலரும் விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.

அவர் கடந்த இரு டி20 போட்டிகளில் 41 மற்றும் 31 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தாலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

அதற்கு காரணம், அவரது பேட்டிங் ஸ்டைல் தான். டி20 போட்டிகளில் துவக்க வீரர் அதிரடியாக ஆட வேண்டும். ஆனால், தவான் நிதானம் காட்டுவது தான் சிக்கலாக மாறி உள்ளது. மூத்த வீரர் என்றாலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

உலகக்கோப்பை காயம்

உலகக்கோப்பை காயம்

ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்தார். ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை தவான் உச்சகட்ட பார்மில் இருந்தார். உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயம் அடைந்து பாதி தொடரில் வெளியேறினார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

அதன் பின் காயத்தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஆடிய தவான் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். சில போட்டிகளில் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

பார்ம் அவுட் இல்லை

பார்ம் அவுட் இல்லை

அவர் முழுவதுமாக பார்ம் அவுட் ஆகாவிட்டாலும், அவரது அதிரடி ஆட்டம் காணமல் போனது. முதலில் நிதானமாக ஆடும் அவர், அதன் பின் ஆடுகளத்தை பழகிக் கொண்ட பின்னும் அதிரடிக்கு மாறாமல், ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ரன் எடுப்பது தான் சிக்கலாக மாறி உள்ளது.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்ற தவான் 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் தான் அணியில் அதிக ரன் எடுத்தவர் என்றாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் நூறை ஒட்டியே இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

இரண்டாம் டி20 ஆட்டம்

இரண்டாம் டி20 ஆட்டம்

இரண்டாவது டி20 போட்டியிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் அதே அளவிலேயே இருந்தது. ஒருபுறம் ரோஹித் சர்மா வெளுத்துக் கட்டிக் கொண்டு இருக்க, தவான் நிதான ஆட்டமே ஆடினார். 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் - தவான் சிக்கல்

ரோஹித் - தவான் சிக்கல்

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் முதலில் நிதானமாக ஆடி, பின் வேகம் எடுக்கிறார். தவானும் துவக்கத்தில் நிதானம் காட்டுவதால், டி20 போட்டிகளில் முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளேவில் இந்திய அணியின் ரன் குவிப்பு மந்தமாக உள்ளது.

அணிக்கு பாதிப்பு

அணிக்கு பாதிப்பு

ரோஹித் சர்மா அதை அடுத்து வரும் ஓவர்களில் ஈடுகட்டினாலும், தவான் அப்படி செய்வதில்லை என்பது தான் பெரும் சிக்கலாக மாறி உள்ளது. இரண்டாம் டி20 போட்டியில் இந்த பிரச்சனையை ஈடுகட்ட ரோஹித் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அது அவரது பாணி இல்லை என்றாலும், அணிக்காக அவ்வாறு ஆடினார்.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

இந்த நிலையில், தவானை நீக்கினால் அடுத்து யாரை துவக்க வீரராக களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் கேஎல் ராகுல் பெயரை முன் மொழிந்துள்ளனர். ராகுல் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடக் கூடிய வீரர்.

சிறப்பாக ஆடுவார்

சிறப்பாக ஆடுவார்

தற்போது அவர் மூன்றாம் வரிசையில் ஆடி வருகிறார். அவருக்கு ஏற்ற துவக்க வீரர் இடத்தில் அவரை ஆட வைத்தால் அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என முன்னாள் வீரர்கள் கூறி உள்ளனர்.

Story first published: Saturday, November 9, 2019, 11:06 [IST]
Other articles published on Nov 9, 2019
English summary
IND vs BAN : Dhawan misses the top gear after slow start in T20 opening. Critics want to replace him with KL Rahul.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+