Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முன்னாள் கேப்டன்” தோனியை வைத்து மெகா திட்டம்.. 2வது டெஸ்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Recommended Video

Dhoni may do commentary during Kolkata test|வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் தல தோனி ?

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோனியை வர்ணனையாளராக அழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்தியா - வங்கதேசம் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.

இந்தியாவில் நடைபெறும், இந்திய அணி ஆடும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி என்பதால் இது முக்கிய வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

டிவியின் திட்டம்

டிவியின் திட்டம்

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பெரிதாக மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள கிரிக்கெட் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தோனி உட்பட அனைத்து முன்னாள் கேப்டன்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளது.

கங்குலி சாதனை

கங்குலி சாதனை

கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பின் அடுத்த நாளே மிகப் பெரிய சாதனையாக இந்தியா - வங்கதேசம் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த நடவடிக்கை எடுத்தார்.

பெரிதாக கொண்டாட முடிவு

பெரிதாக கொண்டாட முடிவு

இந்தியா - வங்கதேசம் இரண்டு அணிகளுக்குமே இது தான் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி. அதனால், இதை பெரிதாக கொண்டாட முடிவு செய்துள்ள கங்குலி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னாள் கேப்டன்கள்

முன்னாள் கேப்டன்கள்

அதே சமயம், போட்டியை நேரலையாக ஒளிபரப்ப உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் பெரிய அளவில் திட்டங்களை தீட்டி இருக்கிறது. அதன் ஒரு பகுதி தான் முன்னாள் கேப்டன்களை அழைக்கும் திட்டம்.

மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

அதன் படி டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் முன்னாள் கேப்டன்கள் சில நிமிடங்கள் வர்ணனையாளராக அமருவார்கள். அவர்கள் தாங்கள் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

தோனிக்கு அழைப்பு

தோனிக்கு அழைப்பு

தோனியும் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவருக்கும் நிச்சயம் அழைப்பு அனுப்ப திட்டமிட்டுள்ளது அந்த தொலைக்காட்சி. இந்த திட்டம் பிசிசிஐ ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புக் கொள்வாரா தலைவர் கங்குலி ஒப்புதல் அளித்தால் தோனிக்கு உடனடியாக அழைப்பு அனுப்பப்படும்.

சிறிது நேரம் மட்டுமே

சிறிது நேரம் மட்டுமே

வர்ணனையாளராக தோனியா? என கேட்கப்பட்டாலும், அவர் சில மணி நேரம் அல்லது நிமிடங்கள் மட்டுமே வர்ணனையாளராக இருப்பார் என கூறப்படுகிறது. அவர் பழைய நினைவுகள் பற்றி பேசவே அழைக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014இல் ஓய்வு

2014இல் ஓய்வு

2014இல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார் தோனி. அப்போது முதல் விராட் கோலி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.

ஒருநாள் போட்டி ஓய்வு முடிவு

ஒருநாள் போட்டி ஓய்வு முடிவு

டெஸ்டில் ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனி இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. அவர் இனி இந்திய அணியில் ஆட முடியாது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டு வரும் நிலையில், அவரை வர்ணனை செய்ய அழைப்பது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒப்புக் கொள்வாரா தோனி?

ஒப்புக் கொள்வாரா தோனி?

மேலும், தோனி பொதுவாக அமைதியாக காணப்படுபவர். விளம்பர நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பேட்டி அளிப்பதை கூட அதிகம் பார்க்க முடியாது. அவர் வர்ணனையாளராக இருக்க ஒப்புக் கொள்வாரா? ஒருவேளை தோனி இதற்கு ஒப்புக் கொண்டால் வரலாற்று நிகழ்வில், இது மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

Story first published: Wednesday, November 6, 2019, 12:09 [IST]
Other articles published on Nov 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+