Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல இருக்க எனக்கு 8 ஓவர்.. இல்லாத அந்த பயலுக்கு 9 ஓவரா? தெறிக்கும் இந்தியா- வங்கதேசம் மீம்ஸ்!

கொழும்பு : வங்கதேச அணியிடம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தேவையே இல்லாமல் ஐந்து மாற்றங்களை செய்தது. உலகக்கோப்பையில் இல்லாத வீரர்களுக்கு அணியில் வாய்ப்பும் அளித்து, அதிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். ஷர்துல் தாக்குர் பார்ட்னர்ஷிப்பை உடைக்கிறேன் என விக்கெட்டை எடுத்தாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது, சுப்மன் கில் சதம் என அனைத்தையும் மீம்ஸ் ஆக போட்டு தாக்கி உள்ளனர்.

அதைப் பார்க்கும் முன் இந்தப் போட்டியில், வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும், ஹிரிதோய் 54 ரன்களும் சேர்க்க அந்த அணி 265 ரன்கள் குவித்தது.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

இந்திய அணியில் விராட் கோலி, பாண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், இந்தப் போட்டியில் சொதப்பி 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சுப்மன் கில் தனி ஆளாக போராடி 121 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற திலக் வர்மா 5 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்தனர். அக்சர் பட்டேல் கடைசி நேரத்தில் போராடி 42 ரன்கள் எடுத்தார்.

அக்சர் பட்டேல் 42 ரன்களில் வெளியேறியதை குறிப்பிட்டு, மார்வெல் படங்களில் வரும் ஹல்க் அவர் கிரீடத்தை மறந்துவிட்டு செல்வதாக கூறும் வகையில் இருக்கிறது இந்த மீம்.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

ஷகிப் அல் ஹசன் ரன் குவித்த போது அவர் விக்கெட்டை எடுக்க கேப்டன் ரோஹித் சர்மா ஷர்துல் தாக்குரை அழைத்தார். அவரும் விக்கெட்டை எடுத்தார். அதற்கு இந்த மீம். அவரை பாரட்டும் வகையில் இருக்கும் இந்த மீமின் கீழே அவர் 10 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்ததை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளனர்.
இன்னைக்கு டீம்ல ஏன் 5 மாற்றங்கள்? உலகக்கோப்பைக்கு பரிசோதனை செய்கிறோம். ஆனா பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா அந்த உலகக்கோப்பையிலேயே இல்லையே..

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

ஷமி இந்த தொடரில் தன் இரண்டாவது போட்டியில் நேற்று வாய்ப்பை பெற்றார். ஆனால் அவருக்கு 8 ஓவர்கள் மட்டுமே கொடுத்தார் ரோஹித். இத்தனைக்கும் 8 ஓவரில் 32 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார் ஷமி. ஆனால், உலகக்கோப்பை அணியிலேயே இல்லாத பிரசித் கிருஷ்ணாவுக்கு 9 ஓவர்கள் கொடுத்தார். அதைப் பற்றிய மீம் இது.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை பார்த்து மகிழ்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள், சூப்பர் 4 சுற்றின் புள்ளிப் பட்டியலில் வங்கதேசம் இந்திய அணியை வீழ்த்தியதால் கடைசி இடத்தை தான் அடைந்தோம் என்பதை பார்க்க மறந்துவிட்டார்கள் என்கிறது இந்த மீம்.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

ஆசிய கோப்பை தொடரில் இருந்தே பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறிய நிலையில், இரு அணிகளும் தங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளனர். அப்போது அவர்கள் விமானத்தில் ஜன்னல் ஓர சீட்டுக்கு சண்டை போட்டுக் கொள்வார்களாம்.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

இந்திய அணியில் தனி ஆளாக மாஸ் காட்டி இருக்கிறார் சுப்மன் கில். 121 ரன்கள் குவித்தார்.

IND vs BAN : Fans made funny memes about Indias loss against Bangladesh

வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 2 பந்துகளில் டக் அவுட் ஆனார். அவரது ரன் தொலைக்காட்சியில் வந்த போது அது "O2" என காட்சி அளித்தது. அது ஆக்சிஜனின் பார்முலா. அதை வைத்து ஒரு மீம்.

Story first published: Saturday, September 16, 2023, 12:39 [IST]
Other articles published on Sep 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+