Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்ஷா போக்ளேவை தரக்குறைவாக பேசிய முன்னாள் வீரர்.. பொது மன்னிப்பு கேட்கணும்.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

கொல்கத்தா : இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் நடந்த வர்ணனையாளர்கள் விவாதத்தின் போது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் தெரிவித்த கருத்தை மறுத்து அவரை தரக் குறைவாக பேசினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இந்த நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது கோபம் கொண்ட ரசிகர்கள் அவரை எதிர்த்து, சரமாரியாக விமர்சித்து கருத்து கூறி வருகின்றனர்.

சிலர் அவர், ஹர்ஷா போக்ளேவிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

பிங்க் பந்து விவாதம்

பிங்க் பந்து விவாதம்

பிங்க் பந்து குறித்த விவாதம் ஒன்றின் போது தான் ஹர்ஷா போக்ளேவை தாக்கிப் பேசினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அவர் கிரிக்கெட் ஆடாதவர் என்பதை குறிப்பிட்டு அவர் பேசியது ரசிகர்களை காயப்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தா டெஸ்ட் போட்டி

கொல்கத்தா டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து தான் பயன்படுத்தப்பட வேண்டும். அது இந்தியா மற்றும் வங்கதேச வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அடி வாங்கிய வீரர்கள்

அடி வாங்கிய வீரர்கள்

இந்திய வீரர்கள் பிங்க் பந்தை சமாளித்தாலும், வங்கதேச வீரர்கள் பிங்க் நிற பந்தில் பேட்டிங் செய்ய திணறினர். ஐந்து வீரர்கள் பவுன்சர் பந்துகளால் கடுமையாக தாக்கப்பட்டனர். அதனால், பிங்க் பந்து வீரர்கள் கண்ணுக்கு தெளிவாக தெரிகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

கருத்து கேட்க வேண்டும்

கருத்து கேட்க வேண்டும்

இது பற்றி போட்டி முடிந்த பின் வர்ணனையாளர்கள் விவாதம் செய்தனர். அப்போது ஹர்ஷா போக்ளே, பிங்க் பந்து அனுபவம் குறித்தும். அது கண்ணுக்கு தெரிகிறதா? என்பது குறித்தும் வீரர்களிடம் கேட்டு அறிய வேண்டும் என கூறினார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேலி

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேலி

அதற்கு பதில் அளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "நீங்கள் ஹர்ஷாவிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். எங்களிடம் அல்ல. அவர் மட்டும் தான் கொஞ்சமாக இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்" என கேலியாக கூறினார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லாதவர் என்பதால் அவரை கிண்டல் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது ரசிகர்கள் கடும் கோபம் கொண்டனர். ட்விட்டரில் பலரும் தங்கள் கருத்துக்களை கொட்டி வருகின்றனர்.

பொது மன்னிப்பு வேண்டும்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தான் இந்த விளையாட்டிலேயே மிக மோசமான வர்ணனையாளர். குறைந்தபட்சம் அவர் இந்த விஷயத்தில் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு ரசிகர் காட்டமாக கூறி இருக்கிறார்.

கருத்து சொல்வதை கேள்வி கேட்பதா?

இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு வீரராக இருந்து, வர்ணனையாளராக மாறி இருக்கும் சஞ்சய்க்கு இரு தொழில்களின் வித்தியாசமும் நன்கு தெரியும். ஹர்ஷா போக்ளே கருத்து கூறுவதை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். இது நல்லதல்ல என ஒரு ரசிகர் கூறி இருக்கிறார்.

சர்ச்சை சஞ்சய்

சர்ச்சை சஞ்சய்

சஞ்சய் மஞ்சரேக்கர் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாவது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது உளறிக் கொட்டி, இணையத்தில் ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார். ஜடேஜாவை கூட விமர்சித்து, அவரிடம் இருந்தே கடும் திட்டு வாங்கினார். அப்படி இருந்தும், தன் மோசமான விமர்சனங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

Story first published: Monday, November 25, 2019, 16:56 [IST]
Other articles published on Nov 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+