Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN Test: வங்கதேசத்துக்கு ஆப்பு வைத்த சேப்பாக்கம்.. கருப்பு - சிவப்பு ட்விஸ்ட் இருக்கு

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பிட்ச் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை வைத்து திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சி நடக்க உள்ளது.

வங்கதேச அணி அதன் சொந்த மண்ணில் கருப்பு நிற மண் கொண்ட பிட்ச்சில்தான் அதிகம் விளையாடி உள்ளது. அது மந்தமான பிட்ச்சாக இருக்கும். அதில் அதிக அளவில் ரன் குவிக்க முடியாது. மேலும் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையும் நிலவும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பொதுவாக மந்தமான பிட்ச் தான் இருக்கும்.

ind vs ban india bangladesh

ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிற மண் கொண்டு பிட்ச் அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம், வங்கதேச அணிக்கு முதல் போட்டி சவால் ஆனதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு நிற மண் கொண்ட பிட்ச் என்பதால் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை நிலவும்.

மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து இந்திய அணி பயிற்சி செய்ய துவங்கி உள்ளது. இந்திய வீரர்களுக்கு பயிற்சியில் கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணிக்கும் கருப்பு நிற பிட்ச் தான் பயிற்சி செய்ய அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், வங்கதேச அணியால் போட்டிக்கு முன் சிவப்பு நிற பிட்ச்சில் பயிற்சி செய்ய முடியாமல் போகும். வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச்சை சமாளிக்க சிரமப்பட வேண்டி இருக்கும்.

இந்திய அணியை பொறுத்தவரை ஒரு வார காலம் தொடர்ந்து வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரை அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இந்த ஒரு வார கால வலைப் பயிற்சி அமைய உள்ளது.

தினமும் காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். பொதுவாக இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே வலைப் பயிற்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியின் போது வங்கதேச பந்துவீச்சாளர்களை போல பந்து வீசும் தமிழ்நாட்டை சேர்ந்த பந்துவீச்சாளர்களான அஜித் ராம், சித்தார்த் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இந்திய வீரர்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசி வருகிறார்கள்.

Story first published: Saturday, September 14, 2024, 10:35 [IST]
Other articles published on Sep 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+