IND vs BAN: "கோலியை எல்லாம் நம்ப முடியாது..பண்ட் நீ போ" 2வது டெஸ்டில் நடந்தது என்ன?
கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் வரிசையில் பல ஆண்டுகளாக களம் இறங்கி வரும் விராட் கோலியை உட்கார வைத்துவிட்டு, அந்த இடத்தில் ரிஷப் பண்ட்டை பேட்டிங் செய்ய அனுப்பினார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். ஆனால், அந்த முயற்சி அவருக்கு எதிராகவே திரும்பியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி ஐந்தாம் வரிசையில் இறங்கினாலும் அதிரடியாக ரன் சேர்த்தார். மேலும், அதிவிரைவாக 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்று நாட்களில் மொத்தமே 35 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டு இருந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒன்றரை நாள் ஆட்டமே மீதம் இருந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடினர். ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 10.1 ஓவரில் எல்லாம் 100 ரன்களை எட்டியது.
அதன் பின் ஜெய்ஸ்வால் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் நான்காம் வரிசையில் விராட் கோலி களம் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அனுப்பப்பட்டார். அதற்கு முக்கிய காரணமே இந்திய அணி விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்பதுதான். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் விராட் கோலிக்கு முன்னதாக அவர் அனுப்பப்பட்டார்.
விராட் கோலி ஒருநாள் போட்டியிலேயே நிதானமாக ரன் சேர்க்கிறார் என்ற விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், அவருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் அனுப்பப்பட்டார். ஆனால், பண்ட் 11 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், ஐந்தாம் வரிசையில் இறங்கிய விராட் கோலி அதிரடியாக ரன் சேர்த்தார்.
அவர் 23 பந்துகளை சந்தித்து இருந்த நிலையில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். இந்த மைல் கல்லை விரைவாக எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல் சாதனையை செய்து இருந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications