Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில், பண்ட்-க்கு நோ.. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு? இந்திய டி20 அணி தேர்வு!

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த அணியில் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. 2வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

ind vs ban sanju samson rishabh pant

அக்.6ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை இராணி கோப்பை அக்.1 முதல் அக்.5 வரை நடக்கவுள்ளதால், நட்சத்திர வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கட்டாயம் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

அதேபோல் இளம் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன், துருவ் ஜுரெல், கலீல் அஹ்மத் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபிட்னஸை நிரூபித்துள்ளார்.

இதனால் அவர் நிச்சயம் இடம்பெறுவார். அதேபோல் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளதால், நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், ரிஷப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரியான் பராக், ஆவேஷ் கான் ஆகியோர் மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் கம்பீரின் ஃபேவரைட் வீரரான ஹர்சித் ராணாவுக்கு இம்முறை பிளேயிங் லெவனிலேயே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஸ்பின்னர்களை பொறுத்தவரை ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி தயார் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இம்முறை டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, September 28, 2024, 13:26 [IST]
Other articles published on Sep 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+