Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை- பாதியில் சென்ற ஹர்திக்.. கை கொடுத்து பந்துவீசிய கோலி

புனே: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. புனே வில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி அதே பிளேயிங் லெவனை வைத்து தான் விளையாடுகிறது. இந்த நிலையில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.

Ind vs ban - Hardik pandya injured as virat kohli completed his over

ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கும் சாதகமாக செயல்படவில்லை.இதனை பயன்படுத்திக் கொண்டு வங்கதேச வீரர்கள் இந்த நெருக்கடியும் இன்றி ரன்களை சேர்த்து வந்தனர்.இந்த நிலையில் ஆட்டத்தில் ஒன்பதாவது ஓவரை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வீசி வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரிகள் சென்றது.

முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில் ஹர்திக் பாண்டியா திடீரென்று வலியால் துடித்தார். இதனால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து மருத்துவக்குழுவினர் வந்து ஹார்திக் பாண்டியாவை சோதித்தனர்.அதன்பிறகு அரபிக் பாண்டியா எழுந்து நின்று பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வலி தாங்க முடியாததால் அவர் பெவிலியன் நோக்கி சென்றார்.

இதனை அடுத்து இந்த ஓவரை விராட் கோலி வைத்து முடிக்க ரோகித் சர்மா முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து விராட் கோலியிடம் பந்து சென்றவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் பந்து வீசுவது இது முதல் முறை அல்ல. அவர் 2011 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் கூட பந்து வீசி இருக்கிறார்.

இதை அடுத்து விராட் கோலி எஞ்சிய மூன்று பந்துகளையும் வீசினார் இதில் பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்களை மட்டுமே அடித்தனர். விராட் கோலி வேகம் குறைவாக பந்து வீசுவார் என்பதால் கே எல் ராகுல் ஸ்டெம்ப் அருகே வந்து நின்றார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Story first published: Thursday, October 19, 2023, 15:47 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+