Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 5 விக்கெட்டுகள்.. மெகா சாதனைக்கு தயாரான ஹர்திக்.. வங்கதேச டி20 தொடரில் நடக்கப் போகும் வரலாறு

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மெகா சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டி20 தொடரில் 5 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினால், இந்திய டி20 வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை படைப்பார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி துணைக் கேப்டனாக செயல்பட்டவர் ஹர்திக் பாண்டியா. இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த சூழலில், அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பயிற்சியாளராக உள்ளே வந்த கவுதம் கம்பீர், மொத்த திட்டத்தையும் மாற்றினார்.

ind vs ban hardik pandya suryakumar yadav

ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் பிரச்சனை மற்றும் காயங்களை காரணம் காட்டி கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் யாதவ் பக்கம் திருப்பினார். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் ஹர்திக் பாண்டியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதேபோல் கேப்டன்சி குறித்து இந்திய அணி வீரர்களுடமும் கருத்து கேட்கப்பட்டது. இதனால் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சி கைகளை விட்டுப் போனது.

இருந்தாலும் ஒரு வீரராக ஹர்திக் பாண்டியா இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். இந்த நிலையில் 2 மாத நீண்ட ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா வங்கதேச டி20 தொடரில் களமிறங்கவுள்ளார். கடந்த சில வாரங்களாகவே பயிற்சி மேற்கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா, நேற்று முதல் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இளம் வீரர்களான ஹர்சித் ராணா, மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் இணைந்து பவுலிங் பயிற்சியில் ஹர்திக் பாண்டியா ஈடுபட்டார். நாளை மறுநாள் முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் பயிற்சி தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் முக்கிய சாதனை படைக்க ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை புவனேஷ்வர் குமார் வசம் உள்ளது. 34 வயதாகும் புவனேஷ்வர் குமார் 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் ஹர்திக் பாண்டியா 102 டி20 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைக்க ஹர்திக் பாண்டியாவுக்கு வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் விளையாடினாலே, ஹர்திக் பாண்டியாவால் எளிதாக இந்த சாதனையை படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 4, 2024, 12:08 [IST]
Other articles published on Oct 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+