Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப போயிட்டு 4 ஓவர் கழிச்சு வாங்க.. திட்டம் போட்டு ஆப்பு வைத்த கோலி.. 15 நிமிடத்தில் 2 விக்கெட்!

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் கலக்கியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் கேப்டன் விராட் கோலி, முதல் சில ஓவர்களில் தடுமாறிக் கொண்டு இருந்த உமேஷ் யாதவை வைத்து திட்டம் தீட்டி 15 நிமிடத்திற்குப் பின் இரண்டு விக்கெட்கள் வீழ்த்த வைத்தார்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டி

கொல்கத்தா டெஸ்ட் போட்டி

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வங்கதேசம் எந்த வகையிலும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்கவில்லை.

இஷாந்த் சர்மா மிரட்டல்

இஷாந்த் சர்மா மிரட்டல்

இந்தப் போட்டியில், இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். தன் முதல் பந்து முதல் மிரட்டிய அவர், முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், உமேஷ் யாதவ் துவக்கத்தில் சரியாக பந்து வீசவில்லை.

உமேஷ் யாதவ் தடுமாற்றம்

உமேஷ் யாதவ் தடுமாற்றம்

உமேஷ் யாதவ் முதல் ஆறு ஓவர்களில் மூன்று ஓவர்கள் வீசினார். அவரால் சரியான முறையில் பந்து வீச முடியவில்லை. ஒரு ஓவரில் இரண்டு ஃபோர் சென்ற நிலையில், அதற்கு அடுத்த ஓவரில் அவர் பந்து வீச ஓடி வரும் போது தடுமாறினார்.

கோலி திட்டம்

கோலி திட்டம்

இதைக் கண்ட கோலி, எட்டாவது ஓவரை உமேஷ் யாதவ்வை வீச வைக்காமல், ஷமிக்கு அளித்தார். அப்போது உமேஷ் யாதவை அழைத்து காதில் கிசுகிசுத்தார் கோலி. அது தான் உமேஷ் யாதவ்வை வைத்து கோலி போட்ட திட்டம்.

4 ஓவர்கள் கழித்து..

4 ஓவர்கள் கழித்து..

ஆறாவது ஓவரை வீசி இருந்த உமேஷ் யாதவை, அடுத்த நான்கு ஓவர்கள் கழித்து 11வது ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய திசையில், பந்து வீச வைத்தார் கேப்டன் கோலி. இந்த திசை மாற்றம் சரியாக வேலை செய்தது.

இரண்டு விக்கெட் வீழ்ந்தது

இரண்டு விக்கெட் வீழ்ந்தது

உமேஷ் யாதவ் இந்த முறை எந்த தடுமாற்றமும் இன்றி பந்து வீசினார். 11வது ஓவரின் முதல் பந்தில் மொமினுல் ஹக் ரோஹித் சர்மாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் மூன்றாவது பந்தில் மிதுன் பவுல்டு அவுட் ஆனார்.

கோலி குஷி

கோலி குஷி

தன் திட்டம் வெற்றி பெற்றதை கண்ட கோலி, விக்கெட் எடுத்த உமேஷ் யாதவை விட அதிகமாக உற்சாகம் ஆனார். தொடர்ந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டலாக பந்து வீசினர். இந்தியா 30.3 ஓவர்களுக்குள் வங்கதேச அணியை ஆல் - அவுட் செய்தது.

உமேஷ் மூன்று விக்கெட்

உமேஷ் மூன்று விக்கெட்

சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் முதல் இன்னிங்க்ஸில் மொத்தமாக மூன்று விக்கெட் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 5, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய இந்தியா 347 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய வங்கதேசம் மீண்டும் விக்கெட்களை இழந்து மோசமான தோல்வியை நோக்கி ஆடி வருகிறது.

Story first published: Saturday, November 23, 2019, 19:18 [IST]
Other articles published on Nov 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+