Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 வீரர்கள் இந்திய அணியில் அறிமுகம்.. தன் பேச்சை தானே கேட்காத பிசிசிஐ.. ஐபிஎல் தொடரின் ஆதிக்கம்

மும்பை: 2024ம் ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏழு வீரர்கள் இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்திய டி20 அணியில் ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவதி வைத்து மட்டுமே ஒரு வீரரை இந்திய அணியில் தேர்வு செய்ய மாட்டோம் என பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தேர்வு குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், அதற்கு நேர் மாறாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் ஆதரவை பெறும் சிறந்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏழு வீரர்கள் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார், யார்? என்று பார்க்கலாம்.

ind vs ban india bangladesh

அபிஷேக் சர்மா

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்தார். அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக அதிரடியாக ஆடி இருந்தார். அவர் 2024 ஜூலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார்.

ரியான் பராக்

ரியான் பராக் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2024 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ரன் குவித்தார். இதை அடுத்து அவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் முதன் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

துருவ் ஜுரல்

துருவ் ஜுரல் முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார். அவர் 2024 ஐபிஎல் தொடரில் சராசரியாக செயல்பட்ட போதும், அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது அறிமுகத்தை பெற்றார்.

மயங்க் யாதவ்

2024 ஐபிஎல் தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் மயங்க் யாதவ். அவர் 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார் என்ற ஒரே காரணத்திற்காக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்று அறிமுகம் பெற்றார்.

நிதிஷ் குமார் ரெட்டி

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக ஆடி இருந்தார் நிதிஷ் குமார் ரெட்டி. வேகப் பந்து வீசும் ஆல் ரவுண்டராகவும் இருப்பதால் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

துஷார் தேஷ்பாண்டே

சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளராக கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி வந்தார் துஷார் தேஷ்பாண்டே. அவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்று அறிமுகம் செய்யப்பட்டார்.

சாய் சுதர்ஷன்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மிகச் சிறப்பாக ஆடினார் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன். அவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்று சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

Story first published: Tuesday, October 8, 2024, 15:10 [IST]
Other articles published on Oct 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+