Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

92 வருட வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை.. டெஸ்ட்டில் முதன்முறையாக அதிக வெற்றிகள் பெற்ற இந்திய அணி

சென்னை: 92 ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணியின் 179 டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்று உள்ளது. முதன்முறையாக இந்திய அணி இதை செய்துள்ளது. இதுவரை இந்திய அணி 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மொத்தம் 179 வெற்றிகளும், 178 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 222 போட்டிகளை டிரா செய்துள்ள இந்திய அணி, ஒரு போட்டியை மட்டும் டை செய்து இருக்கிறது.

ind vs ban india bangladesh


சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்பு 1932இல் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. அப்போது முதல் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு அதிக அளவில் தோல்விகளே கிடைத்து வந்தன. இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி 1952 இல் கிடைத்தது. அந்த வெற்றியும் இதே சென்னையில் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 72 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற சாதனையும் அதே சென்னை மண்ணில் தான் நடந்துள்ளது. 1988 வரை ஒரே ஆண்டில் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்றதில்லை. முதன்முறையாக 1988இல் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றது.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்திய அணி 79 வெற்றிகளை பெற்றுள்ளது. அதற்கு முன்பு 432 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த இந்திய அணி, கடந்த 15 ஆண்டுகளில் 148 போட்டிகளில் விளையாடி 79 வெற்றிகளை பெற்று இருக்கிறது. பல அணிகள் தங்களின் துவக்க காலத்திலேயே தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்று இருந்தன. ஆனால், இந்தியாவுக்கு 580 போட்டிகளுக்கு பின்னரே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Sunday, September 22, 2024, 13:36 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+