Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: ஆஸ்திரேலியா கூட தொட முடியாத பிரம்மாண்ட ரெக்கார்டு.. சரித்திரம் படைத்த இந்திய அணி

கான்பூர்: ஆஸ்திரேலியாவால் கூட தொட முடியாத டெஸ்ட் தொடர் சாதனையை இந்திய அணி செய்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 0 என வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளின் வரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 2013 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சொந்த மண்ணில் நடந்த 18 டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு முறை தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று இருக்கிறது. 1994 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் சொந்த மண்ணில் நடந்த 10 டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது ஆஸ்திரேலியா.

ind vs ban india bangladesh

அதன் பின் 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்திலும் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. அந்த இரண்டு அணிகளும் தலா எட்டு முறை தங்கள் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணியின் 18 டெஸ்ட் தொடர் வெற்றியை முறியடிப்பது என்பது ஆஸ்திரேலியாவால் கூட முடியாத காரியமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில், இந்த சாதனையை செய்ய குறைந்தது 9 முதல் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் இந்திய அணி சொந்த மண்ணில் மேலும் டெஸ்ட் தொடர் வெற்றிகளை குவிக்கும் என்பதால் இது அத்தனை எளிதில் முறியடிக்க கூடிய சாதனை அல்ல.

இதை தவிர்த்து டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்று இருக்கும் அணிகளின் பட்டியலில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை முந்தி நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தென்னாப்பிரிக்கா இதுவரை 179 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதை முறியடித்து இருக்கும் இந்தியா, தற்போது 180 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.

அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா (414 போட்டிகள்), இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து (397 போட்டிகள்), மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (183 போட்டிகள்) உள்ளன. இந்தியா விரைவில் இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை முந்தி மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, October 1, 2024, 17:40 [IST]
Other articles published on Oct 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+