For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிரைக் கொடுத்து ஆடிய வங்கதேச வீரர்கள்.. ரஹீம், ஆபிப் அசத்தல்.. இந்தியாவை வீழ்த்தி சாதனை!

Recommended Video

வங்கதேசம் அதிரடி... முதல் டி20 போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி

டெல்லி : இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா துவக்கம் முதலே தட்டுத்தடுமாறி தான் ஆடியது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்தியாவை திணற வைத்த வங்கதேசம் தெளிவாக திட்டமிட்டு ஆடி வெற்றி பெற்றது.

காற்று மாசு

காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு உச்சகட்டத்தை அடைந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. தொண்டை வறட்சி மற்றும் கண் எரிச்சல் ஆகியவை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் இந்திய - வங்கதேச வீரர்கள் ஆடினர்.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

வங்கதேச வீரர்கள் இந்த சூழ்நிலையில் பயிற்சியின் போதே மிகவும் சிரமப்பட்டாலும், போட்டியில் எந்த புகாரும் கூறாமல் சிரமப்பட்டு ஆடினர். டாஸில் வென்ற அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றத்துடன் தான் பேட்டிங் ஆடத் துவங்கியது. ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் 15 ரன்களில் வெளியேறினார்.

எட்டு பவுலர்கள்

எட்டு பவுலர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் 22, ரிஷப் பண்ட் 27 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். வங்கதேச அணி எட்டு பவுலர்களை பயன்படுத்தி இந்திய அணிக்கு எதிராக புதிய வியூகம் அமைத்தது.

இந்தியா குறைந்த ஸ்கோர்

இந்தியா குறைந்த ஸ்கோர்

தவான் மட்டுமே பொறுப்பாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார். அறிமுக வீரர் சிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் க்ருனால் பண்டியா அதிரடி ஆட்டம் ஆடினர். இந்தியா 20 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆபிப் அசத்தல்

ஆபிப் அசத்தல்

வங்கதேச அணியில் எட்டு பவுலர்கள் பந்து வீசினாலும், இளம் வீரர் ஆபிப் ஹுசைன் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஷபியுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

வங்கதேசம் சேஸிங்

வங்கதேசம் சேஸிங்

149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது வங்கதேசம். இந்தியா விக்கெட்களை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், முதல் ஓவரில் லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி தீபக் சாஹர் அசத்தல் துவக்கம் அளித்தார்.

ரஹீம் அசத்தல்

ரஹீம் அசத்தல்

எனினும், அடுத்து ஆடிய நயீம் 26, சௌம்யா சர்க்கார் 39 பொறுப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தனர். முஷ்பிகுர் ரஹீம் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

அபார வெற்றி

அபார வெற்றி

கடைசி நேரத்தில் வந்த கேப்டன் மக்மதுல்லா 7 பந்துகளில் 15 ரன்கள் அடித்து, சிக்ஸ் அடித்து தன் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி தேடிக் கொடுத்தார். வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாதனை படைத்த வங்கதேசம்

சாதனை படைத்த வங்கதேசம்

இதுவரை எட்டு போட்டிகளில் இந்தியாவிடம் டி20 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த வங்கதேசம், ஒன்பதாவது போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

Story first published: Sunday, November 3, 2019, 23:24 [IST]
Other articles published on Nov 3, 2019
English summary
IND vs BAN : India vs Bangladesh First T20 match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+