Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா.. வங்கதேசத்தை காப்பாற்ற போராடும் ரஹீம்.. தள்ளிப் போன கிளைமாக்ஸ்!

கொல்கத்தா : இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தள்ளிப் போட்டு, போராடி வருகிறது.

பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்து வரும் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. கையில் 4 விக்கெட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 89 ரன்கள் பின்தங்கி உள்ளது.

வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்

வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்

இந்தப் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும், அந்த அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 30.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா அபார பந்துவீச்சு

இந்தியா அபார பந்துவீச்சு

இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி மூவரும் சேர்ந்து வங்கதேச அணியின் 10 விக்கெட்களையும் சாய்த்தனர். அடுத்து இந்தியா முதல் நாளே, தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

ரோஹித் சர்மா 21, மயங்க் அகர்வால் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினாலும், அடுத்து வந்த புஜாரா 55, கோலி 136, ரஹானே 51 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர்.

விராட் கோலி சதம்

விராட் கோலி சதம்

விராட் கோலி தன் 27வது டெஸ்ட் சதம் கடந்து அசத்தினார். இந்த ஆண்டு இது கோலி அடிக்கும் இரண்டாவது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 194 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

இரண்டாம் நாள் பாதியில் விராட் கோலியின் விக்கெட்டுக்குப் பின் இந்திய அணி தொடர்ந்து ஆறு விக்கெட்களை இழந்தது. இதை அடுத்து இந்தியா 347 ரன்கள் குவித்து 9 விக்கெட்கள் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

வங்கதேசம் சரிவு

வங்கதேசம் சரிவு

அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கிய வங்கதேசம் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 13 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது அந்த அணி. இஷாந்த் சர்மா அந்த அணியின் முதல் மூன்று வீரர்களை வீழ்த்தினார்.

ரஹீம் போராட்டம்

ரஹீம் போராட்டம்

அதன் பின் ரஹீம் - மக்மதுல்லா கூட்டணி அமைத்து ரன் சேர்த்தனர். மக்மதுல்லா 39 ரன்கள் சேர்த்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ரஹீம் அரைசதம் கடந்து, 59 ரன்கள் சேர்த்து ஆட்ட நேர இறுதி வரை களத்தில் இருந்தார்.

தள்ளிப் போன முடிவு

தள்ளிப் போன முடிவு

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இரண்டாம் நாளே வங்கதேசம் தோல்வி அடையும் என எதிர்பார்த்த நிலையில், ரஹீம் போராட்டம் காரணமாக போட்டி மூன்றாம் நாள் தள்ளிப் போனது. இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள் வீழ்த்தி தெறிக்கவிட்டார்.

இன்னிங்க்ஸ் வெற்றி சாத்தியமா?

இன்னிங்க்ஸ் வெற்றி சாத்தியமா?

வங்கதேசம் 89 ரன்கள் பின்தங்கி இருக்கும் நிலையில், மூன்றாம் நாள் அந்த ரன்களை விட அதிக ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறிய இலக்கு நிர்ணயிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை வங்கதேசம் சமாளிக்குமா?

Story first published: Saturday, November 23, 2019, 21:19 [IST]
Other articles published on Nov 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+