Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

68 லீடிங்.. பவுலிங்கில் மூவர் கூட்டணி.. பேட்டிங்கில் புஜாரா, கோலி.. வெளுத்து வாங்கிய இந்தியா!

Recommended Video

India vs bangladesh pink ball test match, day 1 Highlights

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா - வங்கதேசம் மோதும் பகல் - இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்கியது.

இந்தப் போட்டியில் வங்கதேசம் எந்த வகையிலும் இந்திய அணிக்கு ஈடு கொடுத்து ஆடவில்லை.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களுக்குள் 6 விக்கெட்களை இழந்ததுடன், 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்களுக்கு முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

இந்தியா அபார பந்துவீச்சு

இந்தியா அபார பந்துவீச்சு

இந்திய அணியின் இஷாந்த் சர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அவர்களின் வேகத்தின் முன் வங்கதேச பேட்ஸ்மேன் ஒருவர் கூட சவால் விடும் வகையில் ஆடவில்லை,. நான்கு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள்.

புஜாரா, கோலி அரைசதம்

புஜாரா, கோலி அரைசதம்

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 14, ரோஹித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். எனினும், அடுத்து வந்த புஜாரா 55, கோலி 59 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோலி 59*, ரஹானே 23* ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்தியா 3 விக்கெட்கள் இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னிங்க்ஸ் வெற்றி

இன்னிங்க்ஸ் வெற்றி

முதல் நாள் ஆட்டத்திலேயே இந்தியா முதல் இன்னிங்க்ஸில் முன்னிலை பெற்று ஆடி வரும் நிலையில், இந்தப் போட்டி மூன்றாவது நாளுக்குள் முடிவுக்கு வரும், இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, November 22, 2019, 22:07 [IST]
Other articles published on Nov 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+