For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களை விட்ருங்க.. அடி வாங்க முடியலை.. தெறித்து ஓடிய வங்கதேசம்.. இந்தியா இமாலய வெற்றி!

Recommended Video

India vs Bangladesh 2nd test | India win by an innings and 46 runs

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்த இந்திய அணி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துவக்கம் முதல் இறுதி வரை கடும் ஆதிக்கம் செலுத்தி, வங்கதேசத்தை வீழ்த்தியது.

வங்கதேச வீரர்கள் ஐந்து பேர் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களில் தாக்கப்பட்டனர். அந்தளவிற்கு இந்தியா வேகப் பந்துவீச்சை வைத்து வங்கதேசத்தை அச்சுறுத்தியது.

வரலாற்று சிறப்புமிக்க போட்டி

வரலாற்று சிறப்புமிக்க போட்டி

இந்தியா - வங்கதேசம் இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி தான் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி. முதன் முறையாக சர்வதேச அரங்கில் இரு அணிகளும் முதல் முறையாக பிங்க் நிற பந்தில் ஆடினர்.

முதல் இன்னிங்க்ஸ் சரிவு

முதல் இன்னிங்க்ஸ் சரிவு

வங்கதேசம் இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அந்த அணியால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் ஈடுகொடுத்து ரன் குவிக்க முடியவில்லை.

இரு வீரர்கள் தாக்குதல்

இரு வீரர்கள் தாக்குதல்

மேலும், லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹாசன் ஆகிய இருவரும் ஷமியின் அதிவேக பவுன்சர்களால் ஹெல்மட்டில் தாக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அதன் பின் களத்துக்கு வரவில்லை. அவர்களுக்கு பதில் மாற்று வீரர்களாக மெஹிதி ஹாசன் மற்றும் தாய்ஜூல் இஸ்லாம் பாதி போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

வங்கதேசம் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், இந்தியா பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 21, மயங்க் அகர்வால் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினாலும், புஜாரா, கோலி அணியை மீட்டனர்.

கோலி சதம்

கோலி சதம்

கோலி தன் 27வது டெஸ்ட் சதம் அடித்து பட்டையைக் கிளப்பினார். புஜாரா 55, ரஹானே 51 ரன்கள் எடுத்து அவருக்கு கூட்டணி அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா டிக்ளர்

இந்தியா டிக்ளர்

இரண்டாம் நாளின் பாதியில் இந்தியா 9 விக்கெட்கள் இழந்து 347 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளர் செய்தது. வங்கதேசம் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.

வங்கதேசம் படுதோல்வி

வங்கதேசம் படுதோல்வி

இரண்டாம் இன்னிங்க்ஸில் ரஹீம் 74 ரன்கள் எடுத்து தனியாளாக போராடினார். மக்மதுல்லா 39 ரன்கள் எடுத்த நிலையில் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கடைசி வரை அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை. வங்கதேசம் 195 ரன்கள் எடுத்து இரண்டாம் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் 19 விக்கெட்களை வீழ்த்தினர். சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

விக்கெட்கள்

விக்கெட்கள்

முதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இரண்டாம் இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மா 4, உமேஷ் யாதவ் 5 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு போட்டிகளில் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், இந்த டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியது இந்திய அணி.

Story first published: Sunday, November 24, 2019, 16:27 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
IND vs BAN : India vs Bangladesh second test match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+