Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற சூர்யகுமார்.. 2 வீரர்களை அறிமுகம் செய்த இந்திய அணி.. 2 தமிழக வீரர்களுக்கும் வாய்ப்பு!

குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் மயங்க் யாதவ் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணிக்கு 3 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்திய நிலையில், தற்போது டி20 தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேபோல் 14 ஆண்டுகளுக்கு பின் குவாலியரில் உள்ள புதிய மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.

ind vs ban mayank yadav nitish kumar reddy

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இருவருக்கும் இந்திய அணியின் கேப் அளிக்கப்பட்டது. மயங்க் யாதவிற்கு முன்னாள் வீரர் முரளி கார்த்திக்கும், நிதிஷ் குமார் ரெட்டிக்கு முன்னாள் வீரர் பார்த்தீவ் படேலும் இந்திய அணியின் கேப்பை வழங்கி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த பிட்சில் மாற்றம் இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்திய அணியில் ஏராளமான திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் முதல்முறையாக சொந்த மண்ணில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய அணியில் ரவி பிஷ்னாய், ஹர்சித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய 4 பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து வங்கதேச கேப்டன் ஷான்டோ பேசுகையில், வங்கதேச அணி முற்றிலும் புதிய வீரர்களை கொண்டு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 மாதங்களாக தீவிரமாக தயாராகி வருகின்றனார்.

நாங்களும் முதலில் பவுலிங் தான் செய்திருப்போம். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறோம் என்று தெரிவித்தார். இந்திய அணியை பொறுத்தவரை தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணி விவரம்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்

வங்கதேச அணி விவரம்: லிட்டன் தாஸ், ஷான்டோ, ஹொசைன், ஹிருடாய், மஹ்மதுல்லா, ஜேக்கர் அலி, மெஹதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹ்மத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சொரிஃபுல் இஸ்லாம்

Story first published: Sunday, October 6, 2024, 18:52 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+