For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரணியாக இருந்தால் என்ன? ஓடோடி வந்த இந்திய பிசியோதெரபிஸ்ட்.. களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Recommended Video

India physio attends to Nayeem Hasan injury | Nitin Patel win hearts

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரருக்கு உதவ ஓடோடி வந்தார் இந்திய பிசியோதெரபிஸ்ட்.

வங்கதேச வீரர் நயீம், ஷமியின் பந்துவீச்சில் ஹெல்மட்டில் தாக்கப்பட்ட போது இந்த சம்பவம் நடந்தது.

எதிரணி வீரருக்கு உதவ ஓடோடி வந்த இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டுக்கும் மற்றும் அவரை விரைவாக அழைத்த இந்திய அணிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

இரண்டாம் டெஸ்ட் போட்டி

இரண்டாம் டெஸ்ட் போட்டி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

அந்த அணியின் விக்கெட்கள் விரைவாக வீழ்ந்தன. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினர். அதிலும் ஷமி பவுன்சர்கள் வீசி மிரட்டினார்.

லிட்டன் தாஸ் காயம்

லிட்டன் தாஸ் காயம்

20 ஓவர்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடி வந்தார். ஷமி வீசிய பந்தில் அவர் ஹெல்மட்டில் தாக்கப்பட்டு காயம் அடைந்தார்.

பரபரப்பு எழுந்தது

பரபரப்பு எழுந்தது

சில ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடிய அவர், பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் தாக்கத்தால் களத்தை விட்டு வெளியேறினார். வங்கதேச அணியின் கூடாரத்தில் இதனால் பரபரப்பு எழுந்தது.

நயீம் காயம்

நயீம் காயம்

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில ஓவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன் நயீம் ஹெல்மட்டில் தாக்கியது ஷமியின் பவுன்சர். ஏற்கனவே காயம் அடைந்த லிட்டன் தாஸை கண்காணித்து வந்த வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் களத்திற்கு வர தாமதமானது.

இந்திய வீரர்கள் அழைப்பு

இந்திய வீரர்கள் அழைப்பு

அதே சமயம், நயீம் காயமடைந்த உடன் இந்திய வீரர்கள் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்தனர். அவர் உடனடியாக களத்திற்கு விரைந்து நயீமுக்கு முதல் உதவி அளித்து பரிசோதனை செய்தார்.

முதலுதவிக்கு பாராட்டு

இதைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் மற்றும் இந்திய அணியின் உதவியை பாராட்டினர். நயீம் தொடர்ந்து பேட்டிங் செய்தார் என்றாலும் இந்திய அணியின் பேட்டிங்கின் போது அவர் களத்திற்கு வரவில்லை.

இரு வீரர்கள் மாற்றம்

இரு வீரர்கள் மாற்றம்

நயீம், லிட்டன் தாஸ் இருவரும் மூளை அழற்சி காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினர். அவர்களுக்கு பதிலாக இரண்டு வீரர்களை அணியில் சேர்த்தது வங்கதேசம். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷமி மிரட்டல்

ஷமி மிரட்டல்

முதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி விக்கெட்கள் குறைவாக வீழ்த்தினாலும், எதிரணி பேட்ஸ்மேன்களை பவுன்சர் வீசி மிரட்டினார்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 200 ரன்களை தாண்டி முன்னிலை பெற்றது.

Story first published: Saturday, November 23, 2019, 17:33 [IST]
Other articles published on Nov 23, 2019
English summary
IND vs BAN : Indian Physio attends injured Bangladeshi player. Fans appericate it as spirit of cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X