Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. ரிஷப் பண்ட்டுக்கு மாற்று இவர்தான்.. கம்பீர் முடிவு

மும்பை: பிசிசிஐ-யால் ஒதுக்கப்பட்டு இருந்த இஷான் கிஷனுக்கு டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் அடுத்த விக்கெட் கீப்பராகவும் பார்க்கப்படுகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் டி20 வீரர்கள் அந்த தொடரில் பங்கு பெற மாட்டார்கள். அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ரிஷப் பண்ட், சுப்மன் கில், பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வரும் டி20 தொடரில் பங்கேற்காத நிலையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ind vs ban ishan kishan rishabh pant


அதன்படி டாப் ஆர்டரில் சுப்மன் கில்லுக்கு மாற்றாகவும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாகவும் இஷான் கிஷன் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெறுவார் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தனக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மறுபுறம் இஷான் கிஷன் பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின்படி உள்ளூர் போட்டிகளில் ஆடாததால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருந்தது தேர்வுக் குழு. அவர் தற்போது தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வருவதுடன், அதில் அதிக ரன் குவித்து வருகிறார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் அளிப்பது என்ற முடிவை கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுக்க உள்ளனர். அவர்கள் இஷான் கிஷனுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

இஷான் கிஷன் திறமை உள்ள ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஆனால், அவருக்கு இதுவரை இந்திய அணியில் நீண்ட கால அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் இதற்கு முன் அணியில் இடம் பெற்று இருந்தாலும் தொடர்ந்து போட்டிகளில் விளையாட மாட்டார். எனவே, அவருக்கு நீண்ட கால அடிப்படையில் போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்க திட்டமிட்டு இருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.

ரிஷப் பண்ட் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் சிறப்பாக விளையாடவில்லை. அவர் சராசரியாக 30 முதல் 40 ரன்கள் சேர்த்தாலும் அவரது பேட்டிங் அணுகுமுறை மோசமாக உள்ளது. அவர் தாமாக முன்வந்து மோசமான ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வருகிறார். அந்த அணுகுமுறையால் அவர் இனி ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் நிரந்தரமாக இடம் பெற வாய்ப்பு குறைவு தான். தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு மாற்றி விக்கெட் கீப்பரை நிரந்தரமாக தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் இஷான் கிஷனுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

Story first published: Monday, September 16, 2024, 18:33 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+