Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்டிலேயே இருங்க.. டெஸ்ட் அணியில் பும்ரா நீக்கம்.. கம்பீர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடந்தது?

மும்பை: இந்திய அணி அடுத்து வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் அனைத்து முன்னணி இந்திய டெஸ்ட் வீரர்களும் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறி இருக்கிறார். வங்கதேசம் சிறிய அணி என்ற போதிலும் இந்திய அணி முழு பலத்துடன் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கும் நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா இந்த தொடரில் இருந்து நீக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு என்ன காரணம்? என விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். "பும்ரா இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடர் முடிந்த பின் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது."

IND vs BAN india Bangladesh

"இந்த எட்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று மாத காலத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலுவானவை என்பதால் பும்ரா இந்த எட்டு போட்டிகளிலும் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்றால், அவரது வேலைப் பளுவை குறைக்க வேண்டி நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும்."

"அதனால், அவருக்கு இப்போதே ஓய்வு அளித்து விட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் முழுமையாக பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருக்கிறது. அதன் காரணமாகவே, பும்ராவுக்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமியை ஆட வைக்கவும் முயற்சி செய்து வருகிறது பிசிசிஐ. அவர் தற்போது தனது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு விட்டார். எனவே, அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது."

Story first published: Tuesday, August 13, 2024, 8:39 [IST]
Other articles published on Aug 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+