Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப சொல்லுங்க.. நான் பார்ம் அவுட்டா? கிளாசிக் ஆட்டம்.. செம பதிலடி கொடுத்த இந்திய வீரர்!

நாக்பூர் : இந்திய அணியில் ராகுல் பார்ம் அவுட் ஆகி விட்டார் என்ற பேச்சு இருக்கும் நிலையில், மூன்றாவது டி20யில் அபாரமாக ஆடி பேட்டிங்கில் அணியை மீட்டார்.

இந்தியா - வங்கதேசம் மோதிய டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா பேட்டிங்கில் துவக்கத்தில் தடுமாறியது. அப்போது ராகுல் அணிக்கு கை கொடுத்தார்.

கடந்த இரண்டு போட்டிகளில் ராகுல் மீது விமர்சனம் வைத்து வந்த பலரையும் வாயடைக்க வைத்துள்ளார் அவர்.

டி20யில் அபாரம்

டி20யில் அபாரம்

டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் 42-ஐ ஒட்டி பேட்டிங் சராசரி வைத்துள்ளார். மூன்றாவது டி20க்கு முன்னதாக இரண்டு சதம், நான்கு அரைசதம் அடித்து இருந்தார். டி20 ஸ்பெஷலிஸ்ட் என்று கூறுமளவுக்கு அவரது சராசரி இருந்தாலும், அவருக்கு டி20 அணியில் தொடர் வாய்ப்பு கிடைத்ததில்லை.

ரன்கள் குவித்தார்

ரன்கள் குவித்தார்

அதற்கு முக்கிய காரணம், கடந்த 2018 முதல் 2019 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை ராகுல் பார்ம் அவுட்டில் இருந்தார். அதன் பின் ஐபிஎல், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ரன் குவித்தார்.

பார்ம் அவுட் பேச்சு

பார்ம் அவுட் பேச்சு

பின்னர், டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற அவர், அதில் சரியாக ரன் குவிக்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டார். அதனால், மீண்டும் ராகுல் பார்ம் அவுட் என்ற பேச்சு கிளம்பியது.

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

இந்த நிலையில், விராட் கோலி ஓய்வில் இருப்பதால் டி20 அணியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெற்றார். டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் நிதானமாக 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ராகுல்.

அதிக விமர்சனம்

அதிக விமர்சனம்

இரண்டாம் போட்டியில் கடைசி நேரத்தில் பேட்டிங் ஆட வந்து ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுத்தார். ஆனாலும், இந்திய ரசிகர்கள் பலர் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும். சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என விமர்சித்து வந்தனர்.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 3 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கினார் ராகுல்.

அரைசதம்

அரைசதம்

அடுத்து தவான் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 35 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்களை இழந்தது. எனினும், பதற்றம் அடையாத ராகுல் நிதானமாக துவங்கி, சிக்ஸ் அடிக்க ஆசைப்படாமல், ஃபோர் அடித்து ரன் குவித்தார். 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் - ராகுல் கூட்டணி

ஸ்ரேயாஸ் - ராகுல் கூட்டணி

ஸ்ரேயாஸ் ஐயர் - ராகுல் நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் 5 சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். 62 ரன்கள் குவித்தார் அவர்.

செம பதிலடி

செம பதிலடி

கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த ராகுல் கிளாசிக் ஃபோர்களாக அடித்து அரைசதம் கடந்து தன் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அணி இக்கட்டில் இருந்த போது பொறுப்பான ஆட்டம் ஆடி தன் ஆறாவது டி20 போட்டி அரைசதம் கடந்து அசத்தினார் ராகுல்.

இந்தியா ரன்கள்

இந்தியா ரன்கள்

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. ராகுல் 52, ஸ்ரேயாஸ் 62, மனிஷ் பாண்டே 22* ரன்கள் குவித்தனர். வங்கதேச வீரர் நயீம் 48 பந்தில் 81 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தார்.

Story first published: Sunday, November 10, 2019, 22:49 [IST]
Other articles published on Nov 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+