Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்.. முரளிதரன், ஜடேஜா சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்

துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான குல்தீப் யாதவ் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்க கூடியவர். ஆனால் அவருக்கு பெரும் வாய்ப்புகள் கிடைக்கப்படுவதில்லை. கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட பெஞ்சில் அமர்ந்து கொண்டு தான் இருந்தார்.

Kuldeep Yadav

இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்திய அணி தடுமாறும் போதெல்லாம் பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.

நடப்பு தொடரில் மட்டும் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த பட்டியலில் ஜாம்பவான்கள் வீரரான முரளிதரன், ஜடேஜா ஆகியோரை குல்தீப் முறியடித்து இருக்கின்றார்.

இந்த போட்டிக்கு முன்பு சகிபுல் ஹசன் உடன் 28 விக்கெட்டுகள் வீழ்த்தி சமனில் இருந்த நிலையில் தற்போது 29 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா 30 விக்கெட் வீழ்த்திய முரளிதரனை குல்தீப் பின்னுக்கு தள்ளி 31 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் முதலிடத்தில் மலிங்கா 33 விக்கெட்களுடன் உள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தற்போது இறுதிப் போட்டிக்கும் செல்லும். மேலும் இந்தியாவுக்கு இலங்கைக்கு எதிராக ஒரு சூப்பர் 4 ஆட்டமும் எஞ்சிருக்கிறது. இதனால் 33 விக்கெட் வீழ்த்திய மலிங்காவை குல்தீப், நடப்பு ஆசிய கோப்பை தொடரிலே முந்தி முதலிடத்தை பிடித்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, September 24, 2025, 23:39 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+