Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை பார்த்தே கத்துவீங்களா.. வெளிய போங்க தம்பி.. விரலை நீட்டி குல்தீப் யாதவ் கொடுத்த பதிலடி

ஆன்டிகுவா : இந்திய அணியின் தொடக்க வீரரான விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய தான்சிம் ஹசன் ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேசம் தொடக்க வீரரான தான்சித் ஹசனை வீழ்த்திய குல்தீப் யாதவ், விரலை நீட்டி வெளியே போ என்று பதிலடி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 197 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் அணி தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதியில் கால் பதித்துள்ளது.

t20 world cup indian national cricket team cricket Virat Kohli 20 2024

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று எந்தவித வேறுபாடும் இல்லாமல் பொளந்து கட்டினார். குறிப்பாக முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் இருவரின் பவுலிங்கிலும் விராட் கோலி அடித்த சிக்சர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 28 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் தான்சிம் ஹசன் ஷகிப் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பின் அவரை நேரடியாக பார்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஏனென்றால் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால், அவர் எப்படி திருப்பி கொடுப்பார் என்று நன்றாக தெரியும். ஆனால் இம்முறை விராட் கோலிக்கு பதிலாக குல்தீப் யாதவ் பதிலடியை கொடுத்துள்ளார். வங்கதேசம் அணியின் தொடக்க வீரர் தான்சித் ஹசன் 31 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

அப்போது என்ன நடந்தது என்று புரியாமல் நின்ற தான்சித் ஹசனை பார்த்து குல்தீப் யாதவ் விரலை நீட்டி வெளியில் போ என்று சொல்வது போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின் தான்சிம் ஹசன் விராட் கோலியை பார்த்து கத்திய புகைப்படத்தையும், குல்தீப் யாதவ் தான்சித் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய புகைப்படத்தையும் இணைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, June 23, 2024, 6:43 [IST]
Other articles published on Jun 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+