வங்கதேசம் எதிராக ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியல்
சென்னை : இந்தியா வங்கதேசம் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 13 முறை டெஸ்ட் போட்டிகளில் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 11 முறையும் வங்கதேசம் அணி எந்த ஒரு வெற்றியும் பெறாத நிலையில் இரண்டு போட்டி சமனில் முடிவடைந்திருக்கிறது.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற போது சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 248 ரன்கள் குவித்தார்.

அது மட்டுமில்லாமல் இதுவரை சச்சின் வங்கதேசத்துக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 820 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் தொடக்க வீரர் மாயங் அகர்வால். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 243 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருப்பவர் விராட் கோலி. வங்கதேச அணி 2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 246 பந்துகளில் 204 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அது மட்டும் இல்லாமல் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் வங்க தேசத்துக்கு எதிராக விளையாடி மொத்தமாக 432 ரன்கள் குவித்திருக்கிறார்.இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஷிகர் தவான். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் ஒரே இன்னிங்ஸில் 173 ரன்கள் குவித்து அசத்தினார். தவான் வங்கதேசத்துக்கு எதிராக இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரரும் முன்னாள் தொடக்க வீரருமான முரளி விஜய் இருக்கிறார். இவர் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு நிமிஷம் 150 ரன்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பயிற்சியாளான கம்பீர் இதுவரை வங்கதேஷ்க்கு எதிராக 4 போட்டிகளில் 381 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 139 ரன்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications