Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அள்ளிப்போட்டு கொண்டு வந்திருக்காரு.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா.. தெறிக்கவிட்ட அஸ்வின்!

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வங்கதேசம் அணி 4வது நாள் ஆட்டத்தை 158 ரன்களுடன் தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ - ஷகிப் அல் ஹசன் இருவரும் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக போராடினர்.

ind vs ban ravichandran ashwin shane warne

ஆனால் அஸ்வின் அட்டாக்கில் வந்த முதல் ஓவரிலேயே ஷகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்த இன்னிங்ஸில் தனது 5வது விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியாக டஸ்கின் அஹ்மத் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்த, மொத்தமாக 21 ஓவர்களில் வீசி 88 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 37வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே, 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஆனால் அஸ்வின் 101 டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலமாக ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் அஸ்வினும், 3வது இடத்தில் ஷேன் வார்னேவும் இருக்கின்றனர். 4வது இடத்தில் நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹார்டி 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 முறை 5 விக்கெட்டுகளையும், 5வது இடத்தில் இந்தியா ஜாம்பவான் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது முறையாக படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இயான் போத்தம் இருக்கிறார். அவர் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை 5 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 7வது முறையாக 4வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக ஷேன் வார்னே மற்றும் முரளிதரன் ஆகியோரின் சாதனை சமன் செய்துள்ளார். இதில் பட்டியலில் ரங்கனா ஹெராத் மட்டும் முன்னிலையில் உள்ளார். அவர் 12 முறை 4வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 22, 2024, 11:49 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+