For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN - வெளிநாட்டில் வங்கதேச அணி பெற்ற டெஸ்ட் வெற்றிகளின் பட்டியல்

சென்னை : இந்திய, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ரசிகர்கள் ஆன்லைனில் வாங்குகின்றனர். எனினும் டிக்கெட் விலை அதிகமாக இருப்பது குறித்து ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம். இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராகவே டிக்கெட் விலை ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்ட போது வங்கதேசத்திற்கான போட்டிக்கு மட்டும் ஏன் ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி தான்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

ஆனால் வங்கதேசம் அணி தானே என்று நாம் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் பலம் வாய்ந்த பாகிஸ்தானை அவர்களுடைய சொந்த ஊருக்கே சென்று தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் வங்கதேசம் அணியை சாதாரண ஒரு அணியாக கருதி விட முடியாது.

இந்தியா தங்களுடைய முழு பலத்தை எதிர்கொண்டு விளையாடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என தல அஜித்தின் டயலாக் தான் பொருந்தும். இந்த சூழலில் வங்கதேச அணி தங்களது சொந்த மண்ணுக்கு வெளியே இதுவரை எத்தனை டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெற்றிருப்பது என்பதை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று இருக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்திலும், இன்னொரு டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அந்த அணி வென்றிருக்கிறது.

இதேபோன்று 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அந்த அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு நான்கு விக்கெட்டுக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபார சாதனையை படைத்தது.இது போன்று மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு எல்லாம் கிரீடம் போல் வங்கதேச அணி 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தற்போது பாகிஸ்தானை 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி வீழ்த்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வங்கதேச அணி வீழ்த்தி இருக்கிறது.

இதன் மூலம் வங்கதேச அணி வீரர்கள் சரியாக விளையாடி ரன்களை சேர்த்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர்களுடைய நாளில் எந்த ஒரு பெரிய அணியையும் அவர்களால் வீழ்த்த முடியும் என்பது நிதர்சனம். இந்த பட்டியலில் இந்தியா இணைந்து விடக்கூடாது என்பது தான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியா இதுவரை ஒரு முறை கூட வங்கதேசத்திடம் டெஸ்ட் போட்டியில் தோற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 16, 2024, 19:05 [IST]
Other articles published on Sep 16, 2024
English summary
Ind vs Ban - List of Victories of Bangladesh team on foreign soils IND vs BAN - வெளிநாட்டில் வங்கதேச அணி பெற்ற டெஸ்ட் வெற்றிகளின் பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+