Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தங்கத்தை ஆஸ்திரேலியாவுக்கு கூப்பிட்டு போங்க! பேட்ஸ்மேன் பயப்பிடுறாங்க.. பாக். வீரர்கள் பாராட்டு

மும்பை : வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டிகள் இந்திய அணியில் அதிவேக பந்துவீச்சாளரான மாயங் யாதவ் அறிமுகமானார். ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்காக களமிறங்கி தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மாயங் யாதவ், தன்னுடைய முதல் ஓவரில் எந்த ரன்னும் விட்டுக் கொடுக்காமல் மைடனாக வீசினார். நான்கு ஓவரில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த மாயங் யாதவ், ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் மாயங் யாதவ் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசவில்லை மாறாக 149 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்து வீசி பேட்ஸ்மேன் களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்.

ind vs ban mayank yadav india vs bangladesh hardik pandya t20 cricket

இந்த நிலையில் மாயங் யாதவை வெகுவாக பாராட்டியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, ஒவ்வொரு வீரருக்கும் கனவு போன்ற ஒரு அறிமுகப் போட்டி மாயங் யாதவ்க்கு அமைந்தது என்று பாராட்டி உள்ளார். முதல் ஓவரிலே மெய்டன் பிறகு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச்சு என அவர் அசத்தியிருக்கிறார்.

காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் அவரால் அதிவேகமாக பந்துவீசி இருக்க முடியாது. எனினும் 148, 150 என்பதும் அதிவேகம்தான். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மாயங் யாதவ்க்கு சூரியகுமார் யாதவ் முதல் ஓவரை வழங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்னும் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். பேட்ஸ்மேன் மனதில் பயத்தை உண்டாக்கும் வீரராக மாயங் யாதவ் இருக்கிறார்.

அவர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் Front foot எடுத்து விளையாட பயப்படுகிறார்கள். முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மாயங் யாததை பயன்படுத்த வேண்டும் என்று பாசித் அலி பாராட்டியுள்ளார். இதேபோன்று மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரான் அகமல், பிரமிக்கத்தக்க அறிமுகத்தை பெற்று இருப்பதாக பாராட்டியுள்ளார்.

இந்த தொடரில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் வீரராக மாறிவிட்டார். இந்தியாவின் மருத்துவத்துறை சிறப்பாக இருப்பதால் ,அவர் காயத்திலிருந்து விரைவில் மீண்டு வந்து விட்டார் என்று கம்ரான் அக்மல் பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில், இந்திய, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி வரும் புதன்கிழமை டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

Story first published: Monday, October 7, 2024, 20:15 [IST]
Other articles published on Oct 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+