Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: 36 ஆண்டுகள்.. வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.. துபாய் மண்ணில் கொடி நாட்டிய முகமது ஷமி!

துபாய்: 36 ஆண்டுகளுக்கு பின் ஐக்கிய அரபு அமீரக மைதானத்தில் இந்திய அணி வீரர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். கடைசியாக 1988ஆம் ஆண்டு சஞ்சீவ் சர்மா ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தற்போது முகமது ஷமி அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி ஹிருதாய்-ன் அற்புதமான சதம் காரணமாக 228 ரன்களை சேர்த்தது. 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறிய போது, ஹிருதாய் மற்றும் ஜேக்கர் அலி இருவரும் பதற்றம் கொள்ளாமல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Champions Trophy 2025 India vs Bangladesh Mohammad Shami 2025 vs

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 10 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிட்டத்தட்ட உலகக்கோப்பை தொடருக்கு பின் காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக முகமது ஷமி ஓய்வில் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போதும் முகமது ஷமி முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை.

இதனிடையே பும்ராவும் காயம் காரணமாக விலகி கொள்ள, பொறுப்புகள் முகமது ஷமி மீது விழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய அனுபவம் முகமது ஷமிக்கு மட்டும் உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி மாஸ் கம்பேக்கை கொடுத்தார்.

அதேபோல் இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக ஐசிசி தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றை முகமது ஷமி படைத்திருக்கிறார். இதுவரை இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் ஐசிசி தொடர்களில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜாகீர் கானின் சாதனையை முகமது ஷமி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி முறியடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர் ஒருவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். கடைசியாக 1988ஆம் ஆண்டு இந்திய அணியின் சஞ்சீவ் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை 36 ஆண்டுகள், 127 நாட்களுக்கு பின் முகமது ஷமி சமன் செய்து அசத்தியுள்ளார். இதனால் முகமது ஷமிக்கு இந்திய அணி ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, February 20, 2025, 21:32 [IST]
Other articles published on Feb 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+