For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20-யில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்.. ஒரே ஒரு வீரர் மட்டும் 2 இடத்தில்.. மாஸ்!

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. இதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசி அசத்தினார்.

இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் ரிசாத் ஹுசைன் வீசிய ஓவரில் சஞ்சு சாம்சன் 5 சிக்சர்களை அடித்து 30 ரன்கள் அடித்து ஒரே ஓவரில் குவித்தார்.

ind vs ban sanju samson suryakumar yadav hardik pandya

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ரோகித் சர்மா 29 ரன்கள் குவித்து பட்டையை கிளப்பினார். இதேபோன்று கடந்த ஆண்டு கவுஹாத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ருதுராஜ், திலக் வர்மாவும் இணைந்து மேக்ஸ்வெல் ஓவரை 30 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

இந்த பட்டியலில் மீண்டும் ரோகித் சர்மா இடம் பிடித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மாவும் ரிங்கு சிங்கும் இணைந்து ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்து யுவராஜ் சிங் சாதனை படைத்து இருக்கிறார். 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் ஆறு பந்திருக்கும், ஆறு சிக்ஸர் அடித்து யுவராஜ் அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பார்த்தால் சாமுவோ என்ற வீரர் ஒரே ஓவரில் 39 ரன்கள் குவித்தது சாதனையாக கருதப்படுகிறது. இதே போன்று அகிலா தனஞ்செயாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 36 எண்கள் விளாசி அசத்தி இருக்கிறார். அதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலோஸ் பூரான் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்திருக்கிறார்.

Story first published: Sunday, October 13, 2024, 8:46 [IST]
Other articles published on Oct 13, 2024
English summary
Ind vs Ban- Most runs in a single over in T20I cricket டி20-யில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்.. ஒரே ஒரு வீரர் மட்டும் 2 இடத்தில்.. மாஸ்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+