Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியல்

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் அதே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சில ஸ்டார் வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிக்சர்கள் விளாசுவது போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிக்ஸர்கள் அடித்து கலக்குவார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் ஃபில்டர்கள் பேட்ஸ்மேன்கள் அருகே நிற்பார்கள். இல்லையென்றால் ஸ்லிப் பகுதியில் அதிகம் நிற்பார்கள். இதன் காரணமாக சிக்சர்கள் அடிப்பது என்பது ஷேவாக் போன்ற வீரர்களுக்கெல்லாம் சுலபமாக இருக்கும்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இந்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது சேவாக். இதுவரை 104 டெஸ்ட் போட்டியில் விளையாடி 96 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இதை அடுத்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார்.

ரோகித் சர்மா இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 84 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிடித்திருப்பவர் மகேந்திர சிங் தோனி. தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 78 சிக்சர்களை குவித்து இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 69 சிக்சர்களை அடித்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 64 சிக்சர்களை அவர் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இதுவரை 131 டெஸ்டில் விளையாடிய கங்குலி இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்திருப்பவர் ரிஷப் பண்ட். 33 போட்டிகளில் விளையாடி 55 சிக்சர்களை அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருப்பவர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் 103 போட்டியில் விளையாடி 42 சிக்சர்களை அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருப்பவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் 51 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இதுவரை 38 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ரஹானே 85 போட்டிகளில் விளையாடி 35 சிக்சர்கள் அடித்திருக்கிறார்.

Story first published: Wednesday, September 18, 2024, 10:00 [IST]
Other articles published on Sep 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+