Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN- நிதிஷ் குமார் செய்த சாதனை.. ரோகித் சர்மாவின் ரெக்கார்டு முறியடிப்பு

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ்குமார் 34 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியில் நிதிஷ்குமார் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ind vs ban riyan parag nitish reddy rinku singh

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை நிதிஷ்குமார் படைத்திருக்கிறார்.இந்த பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா தன்னுடைய 20 வயது 143 நாட்களில் முதல் அரை சதத்தை அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் திலக் வர்மா இருக்கிறார்.

திலக் வர்மா 20 வயது 271 நாட்களில் அரைசதம் அடித்தார். மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். அவர் 21 வயது 38 நாட்களில் அடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் தற்போது நிதிஷ் ரெட்டி 21 வயது 136 நாட்களில் அடித்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஜெய்ஸ்வால் 21 வயது 224 நாட்களில் அடித்திருக்கிறார். இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிராக ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரன் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்திருக்கிறார்.

நிதீஷ்குமார் அடிக்கும் முதலிடத்தில் உள்ள நிலையில் ரோகித் சர்மா கடந்த 2019 ஆம் ஆண்டு ஆறு சிக்சர் அடித்திருக்கிறார்.இதேபோன்று திலக் வர்மா 2023 ஆம் ஆண்டு 6 சிக்சர் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா மீண்டும் 5 சிக்ஸர்கள் அடித்து நான்காவது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5 சிக்சர் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள்.

21 வயதான நிதிஷ்குமார் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றுவீரராக டி20 கிரிக்கெட்டில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதீஷ் குமார் தற்போது இந்திய அணிக்காக விளையாடிவிட்டதால், அவர் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கப்பட்டால் அவருக்கு 11 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது இங்கே கவனிக்க வேண்டியது ஆகும்.

Story first published: Thursday, October 10, 2024, 21:32 [IST]
Other articles published on Oct 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+