Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN- கம்பீரோ, சூர்யகுமாரோ அல்ல! நிதிஷ் வளர்ச்சிக்கு இந்த ஆஸி வீரர் தான் காரணம்- பாசித் பேச்சு

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் 21 வயது வீரரான நிதிஷ்குமார் ரெட்டி 34 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். அது மட்டும் இல்லாமல் பந்து வீச்சில் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் அடுத்த ஸ்டார் ஆல்ரவுண்டர் என்ற பெயரை பெற்றார்.

இதற்காக நிதிஷ் குமாருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார் ரெட்டி,தாம் அதிரடியாக விளையாட பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யாவும் அனுமதியளித்து எனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், இதனால் தான் சிறப்பாக விளையாடியதாகவும் கூறினார்.

ind vs ban riyan parag nitish reddy rinku singh

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, நிதிஷ்குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி முன்னேறியதற்கு காரணம் சூரிய குமாரோ, கம்பிரோ அல்ல, அது ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தான் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாசித் அலி, நிதிஷ் குமார் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமாக பாட் கம்மின்ஸ் இருக்கிறார்.

பாட் கம்மின்ஸ் பெயரை இங்கு குறிப்பிடாமல் விட்டால், அது நிச்சயம் சரியான விஷயமாக இருக்காது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாட் கம்மின்ஸ் சிறப்பாக விளையாட உறுதுணையாக இருந்தார். எனவே இவர்களுடைய வளர்ச்சிக்கு பாட் கம்மின்ஸ், நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

பாசித் அலியின் இந்த பயிற்சிக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்திய வீரரின் இந்த வளர்ச்சி இந்தியர்களை தான் சாரும் என்றும் இதற்கு ஆஸ்திரேலிய வீரர்களை பாராட்ட கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் பாகிஸ்தான் அணியே தற்போது பரிதாபமான நிலையில் இருப்பதால், அந்த அணி குறித்து கவலைப்படுங்கள், இந்திய அணி குறித்து எதுவும் பேச வேண்டாம் என்றும் அவருக்கு பதில் அளித்து இருக்கிறார்கள்.

Story first published: Thursday, October 10, 2024, 23:55 [IST]
Other articles published on Oct 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+