Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: "உங்களை நம்பி தான் இருக்கோம்" இந்திய அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் உருக்கமான கோரிக்கை

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே தழுவாமல் விளையாடுகிறது. ஆனால் வங்கதேசத்தை பொருத்தவரை இலங்கை அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் சூப்பர் போர் சுற்றில் விளையாடுகின்றனர்.

இந்த தருணத்தில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி தோல்வியை தழுவினால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் நல்லதாகும். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் இன்று வங்கதேசத்தை இந்திய வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Ind vs Ban

இன்று ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதும் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலே போதுமானது. இல்லை என்றால் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனை கலாய்க்கும் விதமாக சூப்பர் மேன்-ஐ நம்பி ஒட்டுமொத்த மக்களும் இருப்பது போல் இந்திய ரசிகர்கள் மீம்ஸ் போட்டு பாகிஸ்தானை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இதனால் இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும். ஒரு வேலை இந்தியா தோல்வியை தழுவினால் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு எதிராக இந்தியா மோதும் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக மாறிவிடும். அதில் இந்திய அணி இலங்கையை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு யாருமே எதிர்பார்க்காதபடி மோதும் இதனை குறிப்பிட்டுள்ள சிலர் பாகிஸ்தான் ரசிகர்கள் உங்களுக்கு ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால், தயவு செய்து இன்று வங்கதேசத்தை வீழ்த்தி விட்டு இறுதிப் போட்டிக்கு மீண்டும் எங்களுடன் வாருங்கள். அப்போதுதான் உங்களால் வெல்ல முடியும் என்று தங்களது சொந்த அணியை கிண்டல் செய்து இருக்கின்றனர்.

Story first published: Wednesday, September 24, 2025, 15:39 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+