Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச தொடரில் அஸ்வின் படைக்க போகும் மாபெரும் சாதனை.. நடப்பாண்டிற்குள் முரளிதரன் சாதனையும் காலி

சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா கேஎல் ராகுல் போன்ற தலைசிறந்த வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை டெஸ்டில் ஒரு மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு எப்படி அரை சதம், சதம் அடிப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுமோ, அதேபோல் பவுலர்கள் ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட் மற்றும் ஒரு டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்துவது என்பது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


அந்த வகையில் அஸ்வின் இதுவரை தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் அணில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்திருந்தார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணியின் முரளிதரன் இருக்கிறார். முரளிதரன் இதுவரை 11 தொடர் நாயகன் விருதை வாங்கி இருக்கிறார். தற்போது அஸ்வின் பத்து தொடர் நாயகன் விருதை வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினால் முரளிதரனின் சாதனையை சமன் செய்யக்கூடும். அது மட்டும் அல்லாமல் அடுத்ததாக வரும் நியூசிலாந்து அல்லது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் அஸ்வின் தொடர் நாயகம் விருதுவென்றால் முரளிதரன் சாதனையை முறியடிக்கக்கூடும்.

இதுவரை முரளிதரன் 61 டெஸ்ட் தொடர்களில் விளையாடி 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். அஸ்வின் 41 டெஸ்ட் தொடர்களில் விளையாடி 10 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். காலிஸ் 61 டெஸ்ட் தொடரில் விளையாடி 9 முறை தொடர நாயகன் விருதை வென்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் எட்டு முறை தொடர நாயகன் விருதை வென்று நான்காவது இடத்தில் இருக்கிறார். அஸ்வினுக்கு பிறகு அதிக தொடர் நாயகன் விருது வாங்கியவர்கள் பட்டியலில் சேவாக்கும் சச்சினும் தல ஐந்து முறை வென்று ஒட்டுமொத்தமாக13 வது இடத்தில் இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, September 18, 2024, 6:49 [IST]
Other articles published on Sep 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+