Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 26 விக்கெட்டுகள் தான்.. அஸ்வின் படைக்க போகும் மாபெரும் சாதனை.. முழு விவரம்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் களமிறங்க போகிறார். இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக சர்பராஸ் கானை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சென்னையில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி எஞ்சி இருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். இதில் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகிறது.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


அங்கு வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் கடினமான காரியம். இதனால் இந்தியாவில் நடைபெறும் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி இருக்கிறது. இதில் அஸ்வின், ஜடேஜா அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனென்றால் சுழற் பந்துவீச்சு சாதகமான இந்த மைதானங்களில் இந்த நான்கு பேரும் தான் மிகவும் முக்கிய வீரராக கருதப்படுகிறார்கள். இந்த சூழலில் தமிழக வீரர் அஸ்வின் இந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நார்தன் லயன் 43 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 175 விக்கெட் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தமிழக வீரர் அஸ்வின் 174 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வைத்து இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய ஒரு பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார்.

Story first published: Sunday, September 15, 2024, 16:50 [IST]
Other articles published on Sep 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+