Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட்டில் சம்பவம் இருக்கு.. அனில் கும்ப்ளே சாதனைக்கு அஸ்வின் வைத்த குறி

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை செய்ய இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளராக இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை செய்ய வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் அதிக விக்கெட் சாதனையை முறியடிக்க ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்திய மண்ணில் அனில் கும்பளேவை விட அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்ய இன்னும் 22 விக்கெட்கள் மட்டுமே அவருக்கு தேவை. இந்திய மண்ணில் அனில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய மண்ணில் 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

ind vs ban india ravichandran ashwin

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை அஸ்வின் 23 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் 9 விக்கெட்களை அவர் வீழ்த்தும் பட்சத்தில் ஜாகிர் கான் சாதனையை முறியடிப்பார். வங்கதேச அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருக்கிறார் ஜாகிர் கான். அவர் 31 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அஸ்வின் இந்த தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் ஜாகிர் கான் சாதனையை முறியடிப்பார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லியோன் பகிர்ந்து கொண்டு உள்ளனர். அவர்கள் இருவரும் பத்து முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தி சாதனை செய்துள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் ஒரு முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினால் நாதன் லியோனை முந்தி அவர் மட்டும் தனி ஆளாக அந்த சாதனையை செய்தவராக இருப்பார்.

அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் நாதன் லியோன் 187 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இன்னும் 14 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் அஸ்வின் அவரை முந்துவார்.

2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் இருக்கிறார். அவர் 51 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அஸ்வின் இன்னும் 10 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் அவரை முந்தி முதல் இடத்தை பெறுவார்.

Story first published: Tuesday, September 17, 2024, 15:36 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+