அஸ்வின் சதத்தால் பாகிஸ்தான் கேப்டனுக்கு சிக்கல்.. பெரும் அவமானத்தை சந்தித்த பாபர் அசாம்
சென்னை: வங்கதேச அணிக்கு எதிராக தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்து இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறார். 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமை முந்தி இருக்கிறார் அஸ்வின்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக ஆடி சதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் அவர் 113 ரன்கள் குவித்தார். அதனால் இந்தியா 376 ரன்கள் குவித்தது. அவரது ஆறாவது டெஸ்ட் போட்டி சதம் இந்திய அணியை மீட்டுள்ள அதே சமயம், பாபர் அசாமுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாபர் அசாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தார். இந்த தொடரின் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 51 வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் அவரை முந்தி இருக்கிறார். 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் 9 போட்டிகளில் மொத்தம் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 293 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
பாபர் அசாம் இதே காலகட்டத்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 266 ரன்கள் மட்டும் சேர்த்துள்ளார். அவர் ஒரு அரை சதம் மட்டும் அடித்து உள்ளார். அவரது சராசரி 20.46 ஆக உள்ளது. ஏற்கனவே, பாபர் அசாமை பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு கிளம்பி உள்ளது.
இந்த நேரத்தில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் மிக சிறப்பாக செயல்பட்டு இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதே 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி எட்டு இன்னிங்ஸ்களில் 392 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஒரு சதம் மட்டும் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார். அவரது சராசரி 49 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications