Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. ரவீந்திர ஜடேஜா செய்த மிரட்டல் சாதனை!

கான்பூர்: 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிபெற்ற போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்த போது, ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் கனமழை பெய்ய தொடங்கியதால், ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2வது நாள் ஆட்டமும் கனமழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ind vs ban ravindra jadeja ravichandran ashwin

இதனால் இந்திய அணி ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஏற்கனவே கான்பூர் மைதானத்தின் தரம் ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆட்டம் நடக்காதது கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடியுமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் முக்கியமான சாதனை ஒன்று ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வெற்றிபெற்ற போட்டிகளில் மட்டும் 2 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் என்ற சாதனையை எந்த வீரரும் செய்ததில்லை.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா அந்த சாதனையை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தில் இருக்கிறார். இதுவரை இந்திய அணி வென்ற போட்டிகளில் மட்டும் அஸ்வின் 1,943 ரன்களும், 369 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார்.

அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றொரு சாதனை படைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலிலும் ஜடேஜா இணைவார்.

அண்மையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் இணைந்தார். ஏற்கனவே இந்தப் பட்டியலில் கபில் தேவ், ஜாக் காலிஸ், சோபர்ஸ் உள்ளிட்ட சில வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதனால் ஜடேஜா இணைந்தால், இந்தப் பட்டியலில் இணைந்த 3வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 28, 2024, 18:21 [IST]
Other articles published on Sep 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+