Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - இன்னும் ஜடேஜாவுக்கு 6 விக்கெட் தேவை.. புதிய சாதனை படைக்க வாய்ப்பு

சென்னை : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மிகப்பெரிய சாதனையை படைக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அக்சர் பட்டேல் வருவாரா குல்தீப் இல்லை வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு சிலர் ஜடேஜாவை விட தற்போது அக்சர் பட்டேல் தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் அக்சர் பட்டேலுக்கு தான் இரண்டாவது ஸ்பின்னராக வர வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த நிலையில் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் மைல் கல்லை தொட இருக்கிறார். இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜடேஜா 294 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜடேஜா பெறுவார்.

மேலும் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் ஜடேஜாவுக்கு சேரும். உலக அளவில் இந்த மைல் கல்லை எட்டும் எட்டாவது வீரர் என்ற பெருமையும் ஜடேஜாவுக்கு கிடைக்கும். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது ஜடேஜாவுக்கு முன்பு இசாந்த் சர்மா மற்றும் ஜாகிர் கான் ஆகியோர் 311 விக்கெட்டுகளுடன் உடன் உள்ளனர்.

இதனால் ஜடேஜா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடர்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஜாகிர் கான், இசாந்த் சர்மா சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பேட்டிங்கில் ஜடேஜா 72 போட்டியில் விளையாடி 3036 ரன்களை அடித்திருக்கிறார். இதில் நான்கு சதம், 20 அரை சதம் அடங்கும்.

இதுவரை ஜடேஜா இந்தியாவில் 44 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 213 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் இவருடைய எக்கனாமி 2.35 என்ற அளவில் இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் ஜடேஜா 1824 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்கள் அடங்கும்.

Story first published: Tuesday, September 17, 2024, 14:08 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+