For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா இன்னும் 1 விக்கெட் எடுத்தால் போதும், மகத்தான சாதனையை படைக்க வாய்ப்பு

மும்பை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் பந்துவீசுவதற்காக இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை விட்டு புறப்பட்டு சென்று விட்டார்கள்.

இந்த சூழலில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது. அதேசமயம் வங்கதேச அணி இதுவரை இந்தியாவிடம் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றதில்லை.

ind vs ban india vs bangladesh ravindra jadeja

இதனால் வரலாற்று வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. இந்த சூழலில் தான் ஒரு மகத்தான ரெக்கார்டை ஜடேஜா படைக்க இருக்கிறார். ஜடேஜா இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 299 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஜடேஜா பேட்டிங்கில் 3122 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த சூழலில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினால் 300-வது விக்கெட்டை வீழ்த்திய மைல் கல்லை தொடுவார். அது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 3000 ரன்கள், பந்துவீச்சில் 300 விக்கெட்டுகள் எடுத்த 11 வது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெறுவார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் பிராட், ஆஸ்திரேலிய வீரர் வார்னே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நியூசிலாந்து வீரர் டேனியல் விட்டோரி,இலங்கை வீரர் சமீன்தா வாஸ், தென்னாப்பிரிக்க வீரர் ஷான் போலக், இங்கிலாந்து வீரர் இயன் போத்தம், இந்திய வீரர் அஸ்வின், பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான், நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லி ஆகியோர் இருக்கிறார்கள்.

இதேபோன்று பேட்டிங்கில் ஜடேஜா இரண்டு ரன்கள் கூடுதலாக அடித்தால், நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லியின் சாதனையை முறியடிப்பார். இதேபோன்று ஜடேஜா பேட்டிங்கில் 33 ரன்கள் கூடுதலாக அடித்தால், ஆஸ்திரேலிய வீரர் வார்னே அடித்த ரன்களை ஜடேஜா தாண்டுவார்.

வரும் டிசம்பர் மாதம் வந்தால் ஜடேஜாவுக்கு 36 வயது ஆகிவிடும். ஜடேஜாவுக்கு இருக்கும் உடல் தகுதியை வைத்தால் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடக் கூடும். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 400 விக்கெட்டுகளை தாண்டி கபில்தேவின் சாதனையை உடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பேட்டிங்கில் 4000 ரன்களை கடக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, September 23, 2024, 21:33 [IST]
Other articles published on Sep 23, 2024
English summary
Ind vs Ban - Ravindra Jadeja needs 1 wicket to Joins in Elite club ஜடேஜா இன்னும் 1 விக்கெட் எடுத்தால் போதும், மகத்தான சாதனையை படைக்க வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+