For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த இடம்! ஒரே தவறால் கொத்து பரோட்டாவான இந்திய அணி.. வங்கதேசம் அபாரம்

சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தலா 6 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் இந்திய அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்கும் அணியே ஆட்டத்தில் வெற்றியை பெற முடியும். ஏனென்றால் இந்த மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய முன்னிலையை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி தடுமாறிய போது களத்தில் ஜெயிஸ்வால் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இதனால் மதியநேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச வீரர் ஹசன் மகமுத் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்த போட்டியில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் பண்ட் ஆகியோர் அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரின் முதல் ரவுண்டு ஆட்டத்தில் விளையாடினார்கள். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்ற ஒரு மேட்ச் பிராக்டிஸ் உடன் இருந்ததால் அவர்களுக்கு வங்கதேசம் இடையிலான முதல் போட்டி எளிதாக இருந்தது.

கில்லும் துலீப் கோப்பை தொடரில் விளையாடினார். ஆனால் அவர் இன்று நாக் அவுட் ஆனார். எனினும் கில் இடதுபுறம் சென்ற ஒரு பந்தை தேவையில்லாமல் ஆடி ஆட்டம் இழந்தார். ஆனால் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நாட்களாக விளையாடாமல் மீண்டும் களத்திற்கு திரும்பியதால் இந்த கதி ஏற்பட்டு இருக்கிறது.

துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் விளையாட வேண்டும் என கம்பீர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அந்த தொடரில் விளையாடினர். ஆனால் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் சீனியர் வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த தொடரில் விளையாட தேவையில்லை என பிசிசிஐ சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது இதுதான் ஒரு தவறாக பார்க்கப்படுகிறது. துலீப் கோப்பை தொடரில் கோலியும் ரோகித் சர்மாவும் விளையாடி இருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி களமாக அது அமைந்திருக்கும். இதன் மூலம் நல்ல உத்வேகத்துடன் இன்றைய டெஸ்டில் அவர்கள் விளையாடிருப்பார்கள்.

Story first published: Thursday, September 19, 2024, 12:24 [IST]
Other articles published on Sep 19, 2024
English summary
Ind vs Ban - Reason For Rohit sharma and Virat kohli dismal Performance கோலி, ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த இடம்! ஒரே தவறால் கொத்து பரோட்டாவான இந்திய அணி.. வங்கதேசம் அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+