மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, 41 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் இந்திய அணி இன்று 140- 150 ரன்கள் சேர்ப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ்குமார் 34 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். எனினும் இந்திய t20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் மறுக்கப்பட்ட ரிங்கு சிங் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 53 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸரும் அடங்கும். ரிங்குவின் ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிங்கு சிங், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே பேசிக் கொள்வேன்.
இயற்கையாகவே நான் இது போன்ற கட்டத்தில் அதிரடியாக விளையாடி தயாராகி விட்டேன். ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலையில்தான் நான் நீண்ட காலமாக விளையாடி வருகின்றேன். இது போன்ற கடினமான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து நான் தொடர்ந்து பயிற்சி செய்வேன். இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து தோனியிடம் நான் பேசி இருக்கிறேன்.
அவர் சொன்ன அறிவுரைகள் எனக்கு நல்ல பயன் பெற்றது. அணியில் அடுத்தடுத்து மூன்று நான்கு விக்கெட்டுகள் விழும்போது நாம் நமது தன்னம்பிக்கையை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும். நானும் நிதிஷ் குமாரும் பார்ட்னர்ஷிப் அமைத்தால் இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடுவோம் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.
நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் குறைவாக இருந்தது. இதனால் நாங்கள் சிங்கிள்ஸ் சேர்த்துக் கொண்டும் மோசமான பந்தை அடித்து ரன்கள் சேர்க்கவும் நாங்கள் நினைத்தோம். மகமதுல்லா வீசிய நோ பால் ஆட்டத்தில் திருப்புமுறையை ஏற்படுத்தியது. இதன் மூலம் நிதிஷ் க்கு நல்ல நம்பிக்கை கிடைத்தது என்று ரிங்கு கூறியுள்ளார்.