Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி.. நீங்க ஊருக்கு கிளம்புங்க! பாதி டெஸ்ட் போட்டியில் இளம் இந்திய வீரர் நீக்கம்.. கசிந்த தகவல்!

Recommended Video

பாதி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் நீக்கம்.. இதான் காரணமா ? | Rishabh Pant dropped from test team

கொல்கத்தா : இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் திடீரென நீக்கப்பட்டார்.

அவருக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இளம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கும் போது கூட அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட், முதல் ஆட்டத்திற்கு பின் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பிசிசிஐ அதிகாரி ஒருவர் மூலமாக தெரிய வந்துள்ளது.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாகவே சரியான பார்மில் இல்லை. 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அவரை தயார் செய்து வருகிறது இந்திய அணி. எனினும், அவர் இதுவரை சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வருகிறார்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய ஒருநாள் அணியில் ஆடிய பண்ட், அதன் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களில் ரன் குவிக்கவில்லை. அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

டெஸ்ட் அணி பின்னடைவு

டெஸ்ட் அணி பின்னடைவு

இந்திய அணி நிர்வாகம் டி20 போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது. ஆனால், டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முதல் அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. விரிதிமான் சாஹா, விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

வங்கதேச டி20 தொடர்

வங்கதேச டி20 தொடர்

வங்கதேச டி20 தொடரிலும் ரிஷப் பண்ட் எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. பேட்டிங்கில் சொதப்பலாக ஆடினார். எனினும், அவருக்கு தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு வழங்குவதில் உறுதியாக இருந்தது

வெ.இண்டீஸ் தொடர்

வெ.இண்டீஸ் தொடர்

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் ஆடும் அணியில் இடம் பெறுவார் என கூறி இருக்கிறது தேர்வுக் குழு.

பயிற்சி தேவை

பயிற்சி தேவை

ஏற்கனவே, பார்ம் அவுட்டில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு அந்த தொடருக்கு முன் கூடுதல் பயிற்சி அளிக்க முடிவு செய்த இந்திய அணி, தற்போது நடந்து வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அவரை ஆடவைக்க முடிவு செய்தது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

சற்றே தாமதமாக எடுக்கப்பட்ட இந்த முடிவால், பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளுக்கு பின் நீக்கப்பட்டு, ஸ்ரீகர் பரத் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் நாள் காலையில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

ஷுப்மன் கில் விடுவிப்பு

ஷுப்மன் கில் விடுவிப்பு

அதே போல, ஷுப்மன் கில் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பங்கேற்க அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஷுபம்ன் கில் டெஸ்ட் அணியில் மட்டுமே மாற்று வீரராக இடம் பெற்று வருகிறார்.

இனி டெஸ்ட் வாய்ப்பு?

இனி டெஸ்ட் வாய்ப்பு?

ஸ்ரீகர் பரத் டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இனி ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, November 23, 2019, 14:35 [IST]
Other articles published on Nov 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+